முத்தம் சிந்தும் நேரம்!
அவசர அவசரமாய்நீ பறக்க விட்டுச் செல்லும்
ஒற்றை முத்தத்திற்காக
இரு கன்னங்களும் சண்டையிட
வெற்றிப் பெருமிதத்தில்
புன்னகைக்கின்றன
திருட்டுத்தனமாய்
அபகரித்துக் கொண்ட இதழ்கள்!
:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x
அழகிய சங்கீதம் போல்
வண்டுகள் ரீங்காரமிடும்
ஒரு ரம்மியமான இரவில்
காமத்தின் நெடியினூடே
சுகந்தமாய் மணம்
பரப்பி செல்கிறது நீ
காதலுடன் நெற்றியில் தந்த
ஒற்றை முத்தம்!
:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x
முதல் முத்தம் பற்றிய பேச்சில்
உரிமைதான் என்றாலும்
ஏதோ தவறு செய்வது போல்
படபடத்த இதயம் தான்
நினைவில் உள்ளது என்று
முடிப்பதற்குள் முத்தமிட்டு
கிறங்கியிருக்கும் என்னை
தட்டி எழுப்பி சிரிக்கிறாய்
அந்த முதல் முத்ததின் தித்திப்பை
என் இதயக் கூட்டில்
பதுக்கி வைத்திருப்பதை அறியாமல்...
No comments:
Post a Comment