Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Thursday, 15 March 2012

வெட்கமே இல்லாம....

போன வருசம் இதே மாசம், நான் பாலைவனத்துல இருந்தப்போ சோத்துக்கு ரொம்பத்தான் காய்ஞ்சு போயிருந்தேன். எப்படியோ கஷ்டப்பட்டு சமைச்சு(வேக வெச்சு) சாப்பிட்டுக்கிட்டே நாளைக் கழிச்சுட்டு இருந்தேன். ஒரு நாள் நம்ம கூட்டாளி வந்து "மாப்ளே, நமக்கு வாய்தா அவ்ளோதான், இந்தியா போறேன். என்கிட்ட ஒரு இந்திய மிக்ஸி இருக்கு. மிக்ஸி கண்டிசனை பார்த்து ஒருத்தனும் வாங்க மாட்டேங்குறான். சும்மா குடுத்தாக்கூட வாங்க ஆள் இல்லை. ஆப்போதான் உன் ஞாபகம் வந்துச்சு. வந்து எடுத்துக்கோ"ன்னான். அப்பாடா.. இட்லி, தோசைக்கு வழி பண்ணிய தெய்வமே கும்பிட்டுட்டு ஓட்டமா போயி மிக்ஸிய எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

அப்புறமென்ன? மொதல்ல நல்ல சட்னி அரைக்கிறது எப்படின்னு கூகிளோ கூகிளு. ஒரு 20 பக்கத்தைப் பார்த்து, 10 பக்கத்தை செலக்ட் பண்ணி, 5ஐ தேத்தி.. ஒரு வழியா சட்னி எப்படி அரைக்கிறதுன்னு மனப்பாடமே ஆகிருச்சு.

அப்போதான் சடார்னு மண்டையில ஏறுச்சு. மாவுக்கு என்ன பண்ண. எடுடா வண்டிய, தேடுடா அதுக்கு raw materla. தேடிப் புடிச்சு இட்லி அரிசியும், உளுத்துப் போற நெலமையிலிருந்த உளுந்தையும் வாங்கியாந்தேன். கூகிள் மொதலாளி மாவை எப்படி அரைக்கிறதுன்னு சொல்ல மாட்டேன்னு அடம்புடிக்க, "போடா வெங்காயத்தான் எங்க ப.பாச மக்கள் கில்லி மாதிரி சும்மா சேட்ல தட்டினா மாவே அனுப்புவாங்க, நீ பெரிய டுபுக்கு"..................... அப்படின்னு கூகிள் சேட் தொறந்து பபாச மக்கள் யாராவது இருக்காங்களான்னு பார்த்தேன். டொய்ங்கன்னு சத்தம்.


கவிதாயினி: "அண்ணா சவுக்கியாமா?"
"அதெல்லாம் இருக்கட்டும், எப்படி மாவரைக்கிறது?" இது நானு.
"கிரைண்டர்லதான், இதுகூடவா தெரியாது? நீங்க எல்லாம் என்னத்த படிச்சு கிழிச்சீங்களோ?"எகத்தாளமா சிரிச்சுகிட்டே இப்படி ஒரு பதிலு.
எனக்கோ செம கடுப்புதான் என்ன பண்ண? மாவாட்டி ஆவனுமே
"என் கிட்ட மிக்ஸிதான் இருக்கு, பரவாயில்லியா?"

"ஹ்ம்ம் பரவாயில்லே, அட்ஜஸ்ட் பண்ணி அரைச்சுரலாம்"

"சரி, எப்படி?"

"ஊர வெச்சதை போட்டு சுட்சிய போட்டா அரைக்குது. இது கூடத்தெரியாமையா இத்தனை வருசம் உயிரோட இருக்கீங்க? ஹஹஹாஹ்ஹ்ஹ்"

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சுத்திருச்சு, மிக்ஸி இல்லீங்க என் தலைதான். " அரிசி எவ்வளவு போடனும், உளுந்து எவ்வளவு போடனும்? அதுதான் தெரியனும். சுட்சிய போட்டா ஓடும்னு எங்களுக்கும் தெரியும்"

"அண்ணா வேலை இருக்கு, பார்க்கலாம் பை"

"சொல்லிட்டுப் போ, இல்லாட்டி ஊர்ல இருக்க மாட்டே"

"தெரிஞ்சா சொல்ல மாட்டோமா? ____________________" (இந்த ___க்கு என்ன அர்த்தம்னு கடைசி பத்திக்கு முன்னாடி செவுப்புல இருக்கும் பாருங்க)

"சரி வெயிட் பண்ணு. இன்னொரு சேட் விண்டோ வருது"


"அண்ணா" இது அனு.
ஆஹா வந்துட்டாடா என் குல தெய்வம், மாரியாத்தா.

"தெய்வமே, மாவரைக்க என்னென்ன போடனும்?"

"யு மீன் இட்லி மாவு?"

அப்பாடா வெவரமா ஒருத்தியாவது இருக்காளேன்னு "ஆமாம்மா ஆமா"

"தோசைக்குக் கூட"

"அத்தேதான். ஆமாண்டி என் ராசாத்தி" மனசுக்குள்ள நெய் தோசை மணக்க ஆரம்பிச்சுருச்சு

"குழிப்பணியாரம் கூட.."


ஆஹா, என்ன ஒரு பொது அறிவு "அப்படித்தாண்டி என் ராசாத்தி"
"இட்லிக்கு எல்லாம் என்ன போயி கேட்கலாமா? பிட்சா பர்கர் அப்படின்னு கேளுங்க."
"தோடா, அறுக்க மாண்டாவதனுக்கு அம்பெத்துட்டு அருவாளாம்.இட்லிக்கு இப்போ சொல்லு போதும்"

"ஹிஹிஹி________________________________________" (இந்த ___க்கு என்ன அர்த்தம்னு கடைசி பத்திக்கு முன்னாடி செவுப்புல இருக்கும் பாருங்க)
"அண்ணா, இதுக்கு எல்லாம் பிஸ்து G3தான் இன்னும் ஒரு மணி நேரத்துல சேட்டுக்கு வந்துருவாங்க. அவுங்கள கேளுங்க. சும்மா பிச்சு எடுத்துருவாங்க"
"என்னத்த, தோசையவா?"

"அட அவுங்க சரியான சமையல் ஸ்பெசலிஸ்டு தெரியுமா? பபாசவுக்கு ஒரே செஃபு அது G3தான்"

மனசுக்குள்ள நெய் வாசம் வீசுன தோசை, லைட்டா கருகிறாப்ல ஒரு எபஃட்டு. சே, இதுக்கு எல்லாமா கலங்குறது. சிங்கம் இதுக்கே சோர்த்துட்டா எப்படி? G3 வந்து வயித்துல மாவை வார்ப்பாங்கன்னு நினைச்சுகிட்டே சேட் விண்டோவ பார்த்துட்டே இருந்தேன். அப்பவே நடு ராத்திரி, இன்னும் ஒரு மணி நேரமா? இருக்கட்டும். நமக்குன்னு ஒரு தோசை பொறக்காமையா இருக்கும்?

டொங்க்...டொங்க்..டொங்க்..
எப்ப தூங்கினேன்னே தெரியல, கண்ண முழிச்சு பார்த்த G3. உலகத்துல மானஸ்த்தின்னு ஒன்னு இருந்தா அது G3தான், பின்னே ஒத்த லைன்ல அனுபோட்ட மெயிலுக்கு ஓடோடி வந்துருக்காங்களே.

அப்படியே சிவாஜி மாதிரி பாசத்தக் கொட்டிப் பேச ஆரம்பிச்சேன் "அம்மா, மாவரைக்கிறது எப்படின்னு சொல்லும்மா. நீ சின்ன வயசா இருக்கும்போது..."

"ஹல்லோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. ______________(இந்த ___க்கு என்ன அர்த்தம்னு கடைசி பத்திக்கு முன்னாடி செவுப்புல இருக்கும் பாருங்க)ஆளை விடுங்க. டொங்க். ஆப்லைன்னுக்கு போயாச்சி.

வெளங்குமாடா? ஒரு தோசைக்கு ஆசைப்பட்டு இப்படிச் சின்னா பின்னமாயிட்டேனே.

அதென்ன அந்த _________________

"யாராவது எனக்கு இட்லி, தோசை சுட்டுப் போட்டா நல்ல ரவுண்டு கட்டி திங்கத்தான் தெரியும். மாவெல்லாம் அரைக்கத் தெரியாது. "

இப்படித்தாங்க, சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் ஒரே மாதிரி சொன்னாங்க. ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போனா டபுள் மீல்ஸ் திங்கிற புள்ளைங்க, ஒரு தோசைக்கு வழி இல்லாம பண்ணிபுட்டாங்க. இவுங்களையும் நம்பி ஒருத்தன் வருங்காலத்துல தாலிய கட்டி தோசைக்கு ஆசப்படுவானே அந்த மவராசன், போனா ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினானோ.

இப்போ தலைப்புக்கு வரலாமா.

வட்டல்ல சோத்தக் கொட்டி வாய்க்கா வெட்டி, அதுல சாம்பார் ஊத்தி (தலைப்பை ஒரு முறை நிமிர்ந்து உக்காந்து படிங்க) திங்கிறீங்களே, மாவாட்டத் தெரியாதா?

No comments:

Post a Comment