Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Thursday, 8 March 2012

சிறுக‌தைக‌ள்


1. அவ‌னுக்கு 6 ஆம் ஆண்டு திரும‌ண‌நாள். அழுதுகொண்டிருந்தான். அவ‌ளை க‌ல்யாண‌ம் செய்து முத‌ல் இர‌வில் த‌ர‌ குறைவாக‌ ந‌ட‌த்திய‌து நினைவில் வ‌ந்த‌து. ந‌ண்ப‌ர்க‌ள் பேச்சை கேட்டு அவ‌ளை அப்ப‌டியெல்லாம் செய்து இருக்க‌ கூடாது. எத்த‌னை நாள் சுட்டிருப்பான் வார்த்தைக‌ளால், அவ‌ள் பேர‌ழ‌கி, அவ‌ன் சாத‌ர‌ண‌மான‌வ‌ன். இன்று அவ‌ளில்லை. வ‌ந்திருக்கும் இவ‌ளில் நான் அவ‌ளையே க‌ண்டேன்.

2. திரும‌ண‌மாகி இர‌ண்டே வார‌மான‌ அவ‌ன் மிக‌வும் ம‌ன‌மொடிந்து போயிருந்தான். அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ந‌ட‌ந்தேறிய‌து அவ‌ன் திரும‌ண‌ம், அவ‌ளை அவ‌னுக்கு கொள்ளையாக‌ பிடித்திருந்த‌து. மெல்ல‌ பேசிய‌து, மிர‌ண்ட‌ப‌டி பார்த்த‌து. அவ‌ன் அடிமையாகி இருந்தாள் மூன்றாம் நாளே. ஆனால் அவ‌ள்தான் அவ‌னை த‌விர்த்த‌வாறிருந்தாள். ஒருவேளை புதிய‌ உற‌வுக‌ள், வித்தியாச‌மான‌ சூழ‌ல், உண‌ர்வு கார‌ண‌மாக‌ இருக்க‌லாம் க‌னிய‌ட்டும் என்றிருந்தான். ஆனால் ஒருநாள் ஓடி போயிருந்தாள் ப‌ழைய‌ காத‌ல‌னோடு. க‌ட‌ந்த‌ ஒரு வார‌மாக‌ விடாம‌ல் குடித்துக் கொண்டு இருந்த‌வ‌னை மாற்ற‌ வ‌ந்த‌வ‌ள் விய‌ந்தாள் இவ‌ன் ஏனிப்ப‌டி என்று?

3. அவ‌ளை பார்த்த‌தும் தெரிந்த‌து ப‌ண‌ம் ம‌ட்டுமே அவள் தேவை என்று, அள்ளிக் கொடுத்தான். வா.. வென்று ஆடை அவிழ்த்த‌வ‌ளை பார்த்துக் கொண்டிருந்தான். அவ‌ன் ம‌னைவி போயிருந்தாள், அவ‌ளும் இப்ப‌டி தான் 6 மாத‌ கால‌மாக‌ அவ‌னை ப‌ல‌ முறை அருகில் வ‌ந்து ஏமாற்றி இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன் சென்றே விட்டாள். அவ‌ள் ஆடைக‌ளை போர்த்தினான். விக்கி அழுமவனை வேடிக்கை பார்த்திருந்தாள்.

4. அவ‌ள் எத்த‌னையோ முறை அவ‌னிட‌ம் த‌ன்னை த‌ன் அன்பை வெளிபடுத்த‌ முய‌ற்ச்சித்து இருப்பாள். திரும‌ண‌மான முத‌ல்நாளே த‌னிமையில், நான் ஒருத்தியை தீவிர‌மாக‌ காத‌லித்தேன். என்னால் அவ‌ளை ம‌றக்க‌வோ உன்னை காத‌லிக்க‌வோ முடியாது. காத‌ல் இல்லாத‌ காம‌ம் என‌க்கு பிடிக்க‌லை. இந்த‌ வார்த்தைக‌ளை மாற்ற‌ அவ‌ன் காத‌லியின் இட‌ம் பெற‌ போராடி போராடி வேறிட‌ம் ப‌ற்ற‌ கிடைத்த‌தும் போய் சேர்ந்தாள். அவ‌ன் அவ‌ள் சென்ற‌ பின் தான் உண‌ர்ந்தான் உன்ன‌த‌த்தை த‌னிமையை தொலைக்க‌ வாட‌கைக்கு வ‌ந்த‌வ‌ளிட‌மும் இப்போது அவ‌னால் அவ‌ளை ம‌ட்டும் தான் பார்க்க‌ முடிகின்ற‌து த‌ன் காத‌லியை அல்ல‌.

No comments:

Post a Comment