Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Thursday, 29 March 2012

கூடங்குளம் போராட்டங்கள்

மின்சாரம் என்பதன் உணர்வே இல்லாமல் அதன் முழு பயனையும் அனுபவிக்கும் எனக்கு கூடங்குளம் பற்றி கருத்து சொல்ல அருகதை இல்லையென்பதோடு அணுவியல் மின்சாரம் குறித்த அரிச்சுவடி கூட தெரியாமல் மேதாவித்தனம் காட்டுவதும் சரியில்லை.மாறாக மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மேதாவித்தனம் தேவையில்லையென கருதுகிறேன்.

தமிழகத்திற்கு மின்சார தேவை ஒரு பக்கம், ஜப்பானின் சுனாமிக்குப் பின் அணு மின் நிலையம் பற்றி புதிதாக முளைத்துள்ள ஆபத்து ஒரு புறம் என மிகவும் சிக்கலான சூழலில் தமிழகம் வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கியுள்ளது வருத்தமளிக்கிறது.நேற்று வரை உங்களில் ஒருத்தி நான் என்று சொல்லி வந்த ஜெயலலிதா திடீரென நிலை மாறும் சூர்ப்பநகை சூனியத்தனம் கண்டிக்கத் தக்கது.மாநில முதல்வராக தனது நிலைப்பாட்டை உரக்க சொல்ல அவருக்கு உரிமை உண்டு.மாறாக இரட்டை அரசியல் வேடம் போடுவது அவர் மீதான நம்பிக்கைகளை இழக்கச் செய்யும் என்பதோடு அந்நியள் மாதிரி Split personality decision தமிழக மக்களின் வாழ்வையும் பாதிக்கும்.

இப்பொழுது கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என்று மக்கள் உண்ணாவிரதப் போரட்டம் இருப்பதை காவல்துறை வன்முறையால் தடுத்து நிறுத்துவதை விட தீர்வுகளுக்கான வழிகளை பேச்சு வார்த்தைகள் மூலம் தேடுவதே சிறந்தது.ஒரு வாரமாகியும் மத்திய,மாநில அரசு தரப்பிலிருந்து யாரும் பேச்சுவார்த்தைக்குப் போகாத உதாசீனமும்,போராட்டக்காரர்களை குற்றவியலில் சிக்க வைக்கும் போக்கு கண்டிக்கத் தக்கது. 

கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்து இல்லாதது என்பதற்கான உத்தரவாதத்தையும் மக்களின் பயத்தையும் போக்குவது ஒரு ஜனநாயக அரசின் கடமை.தொழில் வல்லுனர்களின் கருத்துக்கள் இரு வேறு விதமாக மாறுபட்டு இருப்பதால் எது சரியென்ற முடிவுக்கும் மக்களுக்கு குழப்பம்.மின்சக்தி நமது வாழ்க்கையின் முக்கிய ஒன்றாகிப் போன காலத்தில் மின்சாரமில்லாத பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமேயில்லை.மேலும் கூடங்குளம் மட்டுமல்ல,தொழிற்சாலைகள் அமையும் நகர்ப்புறங்களில் சுகாதார பக்க விளைவுகள் உண்டாகின்றன என்பதையும் நாம் உணரவேண்டும். ஆனாலும் வேலை வாய்ப்புக்கள்,நாட்டின் பொருளாதாரம் கருதி சுகாதார குறைபாடுகளோடு நாம் வாழக்கற்றுக் கொண்டிருக்கிறோம்.

1999ம் வருடம் பி..ஜே.பி அரசு இந்தியன் ஏர்லைன்ஸ் IC 814 விமானத்தை தலிபான்கள் (Harkat-ul-Mujahideen) 176 பயணிகளையும் ஹைஜாக் செய்த போது மக்களின் உயிரே முக்கியம் என்று ஜஸ்வந்த் சிங் தலிபான் பணயக் கைதிகளை கந்தகாரில் கொண்டு போய் ஒப்படைத்து பயணிகளை 7 நாட்கள் துன்பங்களுக்குப் பின் அழைத்து வந்தார். மக்களுக்காகவே அரசின் கொள்கைகள்.அரசின் கொள்கைகளுக்காக மக்கள் அல்ல என்பதை உணர்ந்து பிரச்சினைகளின் மையப்புள்ளிகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்ப்பதே நல்ல அரசுக்கு அடையாளமாகும்.

படித்ததில் பிடித்தது


இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்
ஹ்ம்ம்ம்ம்......
நேரடியாகவே கேட்டிருக்கலாம்.......



Tom&Jerry பார்க்கும்
போதெல்லாம்
சிரிப்பாய்தான் வருகிறது
ஹி... ஹி.... ஹி.....
பிற்காலத்தில்
Tom-ஆக நீயும்
Jerry-ஆக நானும்......



என் ஜாதகத்தில்
ஒரு பெரிய கண்டம்
இருக்கிறது என்று
அடுத்த தெரு
ஜோசியக்காரர் சொன்னதை
நான் நம்பவே இல்லை
உன்னை பார்க்கும் வரை......

தேசிய அளவில் கொடுக்கப்படும் விருது


எந்த ஒரு நாட்டிலும் தேசிய அளவில் கொடுக்கப்படும் விருதுகளுக்கு படைப்புகளை தேர்ந்து எடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

யாரோ மண்டபத்தில் எழுதிகொடுத்ததை எடுத்துக்கொண்டு வந்து என்னுடையது தான் என்னுடையது தான் ஐயா பரிசு கொடுங்கள் என்று கேட்டால், எந்த கேள்வியும் கேட்க்காமல் கொடுத்துவிடுகிறது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக.

ஆடுகளம் தமிழகத்தின் சேவல் சண்டையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பு என்றும், அந்த பகுதி மக்களின் பழக்கவழக்கங்கள் மட்டும் இல்லாது கலாச்சாரத்தின் பதிப்பு என்றதாலும் விருதுக்கு உரித்தானது என்று சொன்னார்கள்.

ஆனால் ஆங்கிலத்தில் seabiscuit என்று வந்த படத்தினை குதிரைக்கு பதில் சேவலை கொண்டு ஆங்கிலத்தில் பேசிய வசனங்களை தமிழில் பேசியதாக சொன்னால் அது இவரது சொந்த படப்பாக ஆகிவிடுமா???????????

இதிலே ஈ அடிச்சான் காப்பி என்று ஊரில் சொல்வார்களே அந்த மாதிரி ஒல்லிபிச்சானாக ஒரு கதா நாயகன் வேண்டும் என்றால் தனுசை போடுங்கள் என்று படமாக்கி இருக்கிறார்கள்.

ஆங்கில கதையில் மகனை இழந்து தவிக்கும் அந்த தகப்பனின் மனதை அந்த குதிரையும் அதன் ஓட்டியும் எப்படி மயிலிறகால் வருடி ஆற்றுகிறார்கள் என்ற அந்த புனித்மான உணர்வுகளை தமிழில் அந்த வயதானவரின் மனைவியின் மேல் சந்தேகம் படும்படியும் பொறாமை குணம் கொண்டவனாகவும் வக்கிரபடுத்தியது மட்டுமே மாற்றங்கள்.

அவைகள் தவிர, நன்றாக படித்து பெரிய ஆளாக ஆகவேண்டும் என்று நினைத்தும் படித்தும் வருபவனை குடும்ப நிலையை காரணமாக காட்டி நாயகனை பிரியும் குடும்பத்தின் மேல்வரும் கோபத்தை குத்து சண்டையில் காட்டி அடிப்படும் அந்த அற்புதமான காட்சிகளை தனுசு தெருசண்டையில் இறங்குவதாக காட்டுவது அபத்தத்தின் உச்சம்.

போட்டியாளன் தனது குதிரைக்கு நிகர் எதுவும் இல்லை என்று சொல்லும் காட்சிகளை, பாவம் அந்த காவலர் தனது ஆத்தாவை அசிங்கமாக பேசுவதும். தேற்றமுகத்தோடு சாவக்கிடக்கும் கிளவி மூஞ்சில் எப்படி முழிப்பேன் என்று சொல்வதும் நல்ல நகைச்சுவைகள்.

அட படம் பார்க்கும் நமக்கு தான் இது ஆங்கில படத்தின் ஈ அடிச்சான் காப்பி என்று தெரியாது. இதையே தொழிலாக கொண்டு இயங்கும் பத்திரிக்கைகளுக்கும், விருது தனிக்கை குழுவிற்கும் தெரியவில்லை என்று சொன்னால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

சரி சென்ற ஆண்டுதான் ஒன்று தெரியாதவர்கள் விருது தனிக்கை குழுவில் எனக்கு நா.உவை தெரியும், ச.உவை தெரியும் என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள் என்று பார்த்தால் இந்த ஆண்டும் அதே கதை.

சில சிந்தனைகள்

1.உபதேசம் கேட்க 6 மைல் செல்வது பெரிய காரியமல்ல. வீடு திரும்பிய பின் அதைப்பற்றி சிந்திக்க 15 நிமிடம் செலவழிப்பதே பெரிய காரியம் -பிலிப்

2.
நன்றியை எதிர்பார்க்காதவனுக்கு ஏமாற்றம் இருக்காது.-ஹென்றி

3.நடத்தை எனும் நிலைக் கண்ணாடியில் ஒவ்வொருவருடைய உருவமும் தெரிகின்றது -ராபர்ட் கதே

4.காற்றும் அலைகளும் திறமையான மாலுமிகளுக்கு அனுகூலம்தான். -கிப்பன்


5.விழிப்புடன் செயல்படும் எந்த சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கி விட முடியாது - லாலா லஜபதிராய்

6.வெற்றி, பல நண்பர்களைக் கொடுக்கும். அவர்களைத் தேர்வு செய்வதில் கவனம் தேவை.

7.நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு. அறிஞர் அண்ணா

8.உன் உயர்வை உன்னைவிட உயர்ந்தவர்களோடு ஒப்பிட்டுப் பார் -மகாத்மா காந்தி

9.செல்வநிலை எப்படியிருந்தாலும் திருப்தி மனம் கொண்டால், அது ஆறுதலைத் தருவதோடு பாலைவனத்தில்கூட பசுந்தோட்டத்தை அமைத்து விடும் -ஒயிட்


10.உழைக்காமல் உண்பவனும் திருடன்தான்
.

11.ஒரு நல்ல சிந்தனை, பல நல்ல செயல்களாக மாறும்.
12.திறமைதான் ஏழையின் செல்வம்
13.அதிக ஓய்வு வேதனை தரும்

14.பொருளாசையே உலக அமைதியைக் கெடுக்கின்றது

15.விழிப்புடன் செயல்பட்டால் வெற்றி நம்மைத் தேடி வரும்.

16.மனசாட்சி நீதிபதியைப் போன்றது.
17.மற்றவரை மகிழ வைப்பதே நம் மகிழ்ச்சிக்கு வழி.
18.பாவத்திற்கு பயப்படு; நற்பண்புகளை நாடு.
19.உண்மை ஒன்றே அசையாத அஸ்திவாரம் .

20.மனமுருகி அழத் தெரியாதவனுக்கு மனம்விட்டு சிரிக்கவும் தெரியாது. - யாரோ

21.தன்னம்பிக்கையே நிகரில்லாத செல்வம்

22.கடந்த காலம் நமக்கு பாடமாக இருக்கலாம்; பாரமாக அல்ல.

23.இன்பமும் துன்பமும் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். இன்பம் மட்டுமே இருந்தால் சலித்துவிடும். துன்பத்தை நேசியுங்கள். மகிழ்ச்சியடைவீர்கள்.


24.சந்தர்ப்பத்தை உருவாக்குபவனே வெற்றி பெறுகிறான்.

25.அன்பைக் கெடுக்கும் சுயநலம்; அதை விட்டு விலகுதல் வெகுநலம்.


 

 

 


அக்கம் பக்கம் பார்த்து
கன்னத்தோடு கன்னம் மட்டும்
உரசி போதுமா என்கிறாய்
கல்நெஞ்சக்காரி
நான் கேட்டது முத்தமடி…

அருகில் அமர்ந்து
கதைகள் பேசி
சிரித்து கொஞ்சி
பை சொல்லிவிட்டு
சென்றுவிடுகிறாய்
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்கிறது
இன்னும் என்னில் ஒட்டிக்கொண்டிருக்கும்
உன் ஸ்பரிசம்

உன்னை நெருங்கிவரும்
ஒவ்வொரு முறையும்
அவுங்க இருக்காங்க
இவுங்க இருக்காங்க என்கிறாய்
தவிப்போடு நானும் இருக்கிறேன்…