என் அம்மாவும் நூறு ரூபாய் நோட்டும்.

ஒரு தடவை என் அம்மா அவர்கள் சென்னையில் உள்ள என் வீட்டிற்கு வந்து இரண்டு நாள் தங்கி விட்டு போனார்கள். நம் கிராம புறங்களில் காலம் காலமாக கடைபிடித்து வரும் ஒரு பழக்கம் என்னவென்றால் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் ஊருக்கு கிளம்பும் சமயம் அந்த வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் ஒரு ஐந்தோ பத்தோ அவர்கள் கையில் கொடுத்து விட்டு போவார்கள். அதே போல் என் அம்மாவும் அவர்கள் ஊருக்கு கிளம்பும் சமயம் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து என் பையன் கையில் கொடுத்து (50 ரூபாய் இல்லாத காரணத்தால்) தம்பி நீயும் தங்கச்சியும் பிரித்து எடுத்து கொள்ளுங்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு போய்விட்டார்கள்.
அவர்கள் போன சிறிது நேரத்தில் என் பையன் தீவிரமாக எதையோ யோசித்து கொண்டிருந்ததை கவனித்தேன். அதே நேரம் என் அம்மா கொடுத்த அந்த நூறு ரூபாய் நோட்டும் அவன் கையில் இருந்ததை கவனித்தேன். என் அம்மாவை வாசல் வரை வழி அனுப்பி விட்டு வந்த என் இரண்டாவது பெண் நேராக என் மகனிடம் சென்று அண்ணா எனக்கு என்று கேட்க உடனே என் பையன் கொஞ்சம் கூட தாமதிக்காமல் அந்த நூறு ரூபாய் நோட்டை சர்ரென்று நடுவில் இரண்டாக கிழித்து ஒரு பாதியை தான் வைத்து கொண்டு மறு பாதியை என் மகளிடம் இந்தா என்று நீட்டினான். இதை பார்த்த நானும் என் மனைவியும் ஒரு வினாடி திகைத்து விட்டோம்.
பின்புதான் புரிந்தது. என் அம்மா அவனிடம் சொன்னதை அவன் எந்த மாதிரி எடுத்து கொண்டுள்ளான் என்று. உங்களுக்கு புரிகிறதா?

No comments:
Post a Comment