Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Tuesday, 22 May 2012

குறைந்த மின் அழுத்தத்தால் தூக்கத்தை இழுந்த மக்கள்: டிவி, பிரிட்ஜ், கம்ப்யூட்டர்கள் பழுதாகும் அவலம்

 
தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், சுழற்சி முறையில் மின்வெட்டு, அமல்படுத்தப் படுகிறது. காற்றாலை மின்சாரம் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் காற்றின் வேகம் அவ்வப்போது மாறுவதால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

சென்னை உள்பட சில நகரங்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு அமலில் இல்லை என்றாலும், குறைந்த மின் அழுத்தம் பொதுமக்களை பாடாய்படுத்துகிறது. குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏசி மிஷின்கள் இயங்குவதில்லை. மின் விசிறிகள் மெதுவாக சுற்று கிறது. இதனால் காற்று வராமல், இரவில் தூங்க முடிவதில்லை.

கோடை காலம் தொடங்கியது. முதலே, இந்த இம்சை ஆரம்பமாகி விட்டாலும், அக்னி நட்சத்திரம் ஆரம்ப மானதும் வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை. பகலில் மட்டுமில்லாமல் இரவிலும் வியர்வையில் குளிக்க வேண்டி இருக்கிறது. வீட்டுக்குள் நிலவும் உஷ்ணத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தூக்கத்தை இழந்துள்ளனர்.

பெரும்பாலானோர் இரவில் அதிகபட்சமாக 4 மணி நேரம் கூட தூங்குவதில்லை. இவ்வளவு நேரம் தூங்கினால், அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும். இரவில் தூக்கத்தை தொலைப்பவர்கள், பஸ், ரெயிலில் பயணம் செய்யும் போதோ, அலுவலகத்தில் வேலை செய்யும் போதோ தூங்கி வழியும் நிலை ஏற்படுகிறது.

இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால், பெரும் பகுதியினர் மினிவிசிறி ஏசி போன்ற குளிரூட்டும் சாதனங்கள் இயங்காததால் தூக்கத்தை இழந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

சென்னை நகரில் பல பகுதிகளில் மின் அழுத்தம் சீராக இல்லை. இதனால், மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் பழுதாகின்றன. ஏசி, மிஷின், மின்விசிறி, பிரிட்ஜ், லேப்-டாப், கம்ப்யூட்டர், டிவி, வாஷிங்மிஷின், மிக்சி, மின் மோட்டார்கள் உள்ளிட்ட மின்சாரத்தில் இயங்கும் அனைத்தும் பழுதாகின்றன. பல வீடுகளில் டியூப் லைட்டுகள் எரிவதில்லை.

பெரம்பூர், மைலாப்பூர், அம்பத்தூர், ஒரகடம் உள்ளிட்ட சில பகுதிகளில் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இங்கு உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் மாற்றப்பட்டாலும், மின் சப்ளை சீராக இல்லை. ஏற்றம், இறக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மின்சாரம் பிரச்சினை தொடர்பாக நுகர்வோர்கள் தொடர்பு கொள்ள 155333 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் பெரும்பாலும் `பிஸி'யாக இருக்கும். அல்லது நீண்ட நேரம் மணி அடிக்கும், யாரும் எடுக்க மாட்டார்கள். பொதுமக்கள் எதிர்பார்ப்பதெல்லாம், பகலில் இல்லாவிட்டாலும், இரவு நேரங்களிலாவது, சீரான மின் விநியோகம் செய்யவேண்டும் என்பது தான். மின்சார வாரியம் அதை செய்தால், மக்கள் வாழ்த்துவார்கள்.        

No comments:

Post a Comment