Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Wednesday, 16 May 2012

எச்.ஐ.வி. கிருமி: வீட்டிலேயே சோதனை செய்யும் கருவி கண்டுபிடிப்பு
 
எச்.ஐ.வி. கிருமி தாக்கியுள்ளதா என்பதை அறிய மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும். அங்கு ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் எச்.ஐ.வி. தாக்கியுள்ளதா என்பதை கண்டறியும் முறைகளான எலிசா டெஸ்ட், வெஸ்டர்ன் பிளாட் டெஸ்ட் ஆகிய முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இந்த பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு குறைந்தது 24 மணி நேரங்களாவது ஆகும் என கூறப்படுக்கிறது.
 
இந்நிலையில் எச்.ஐ.வி. கிருமி தாக்கியுள்ளதா என்பதை வீட்டிலிருந்தபடியே சோதனை செய்து கொள்ளும் கருவி ஒன்றை அமெரிக்காவிலுள்ள 'ஓரா ஷ்யூர் டெக்னாலஜிஸ்' நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருவியை விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளின் குழு பரிந்துரைத்துள்ளது.
 
'ஓராகுயிக்' என்னும் பெயரிலான இந்த கருவியை, வாயில் தடவி எடுப்பதன் மூலம் எச்.ஐ.வி உள்ளிட்ட ஏதாவது நோய்க்கிருமிகள் உடலில் இருக்கிறதா என்பதை 20 நிமிடங்களில் அறிந்துகொள்ள முடியும். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் இது அங்கீகரிக்கப்பட்டால், எச்.ஐ.வியை உடனடியாக வீட்டிலேயே சோதனை செய்துகொள்வதற்கான முதலாவது கருவியாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
 
இந்தக் கருவியின் மூலம் செய்யப்படும் சோதனை முடிவுகள் 100 வீதம் துல்லியமானவை என்று சொல்லமுடியாது என்ற காரணத்தால், தவறான முடிவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இது 100% சரியான முடிவை காட்டாது  என்ற எச்சரிக்கை வாசகத்தை இந்த கருவியின் மீது பொறிக்க வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
 
இதனை விற்பதற்கு அனுமதி தராலாமா? வேண்டாமா? என்பது குறித்து அமெரிக்க மருத்துவத் துறை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment