Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Saturday, 19 May 2012

மறக்க முடியாத  அனுபவங்கள்




வீட்டுக்கு உள்ளே சென்றவுடன் அங்கே என் நண்பன் குருமூர்த்தி நன்றாக போர்த்திக்கொண்டு உறங்கி கொண்டு இருந்தான்.  எனக்கு அவனை பார்த்ததும் அப்படியே கண்ணில் நீர் வந்து விட்டது. 

அப்புறம் அவனை எழுப்பி என்னடா ஆச்சு என்று கேட்டேன்.  ரயில் ஸ்டார்ட் ஆனா பிறகு என்னை அங்கே இங்கே என்று தேடி உள்ளான். நான் ரயிலை பிடிக்க ஓடி வந்ததை பார்த்திருக்கிறான்.  ஆனால் சாமான்கள் இருந்ததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சரி நான் எப்படியும் வந்து விடுவேன் என்று எண்ணிக்கொண்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்து விட்டான்.  கடைசியில் பூனா   வரை பார்த்துவிட்டு நான் வரவில்லை என்பதை உறுதி படுத்திகொண்டு தன எதிரே உள்ளவரிடம் நடந்த எல்லா சம்பவத்தையும் கூறியுள்ளான். இவன் பெட்டியில் அல்லாடுவதை பார்த்திருந்த அவர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு "சரி தம்பி நீ சொல்லுவதை நான் அப்படியே நம்புகிறேன்.  பார்த்தல் படித்த பிள்ளை மாதிரி இருக்கிறாய். இப்படியா அலட்சியமாக இருப்பது" என்றவர், "சரி பரவாஇல்லை அடுத்த ஸ்டேஷன் சோலாப்பூர்.  அந்த ஸ்டேஷன் வரட்டும் நான் உனக்கு டிக்கெட் வாங்கி தருகிறேன்" என்றவர் சொன்ன மாதிரியே டிக்கெட் வாங்கி கொண்டுதுள்ளார்.  உடனே என் நண்பன் அவருக்கு நன்றி சொல்லி "சார் நீங்கள் செய்த உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். உங்கள் அட்ரஸ் கொடுங்கள் நான் ஊர் போய் சேர்ந்தவுடன் பணத்தை அனுப்பி விடுகிறேன்" என்றானாம்.  அதற்கு அந்த நல்ல மனிதர் "தம்பி நீ எனக்கு இந்த பணத்தை திருப்பி தர வேண்டாம்.  உன் வாழ்கையில் இதுபோல் யாரையாவது சந்தித்தால் முடிந்தால் அவர்களுக்கு இதுபோல் உதவி செய் அதுபோதும்" என்று சொன்னவர் என் நண்பன் சென்னை வந்து சேரும்வரை அவனுக்கு சாப்பாடும் வாங்கி கொடுத்துள்ளார். 

ஒருவழியாக சென்னை வந்தவுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அங்கே வசிக்கும் என் நண்பனுக்கு போன் செய்து அவனிடம் விசயத்தை சொல்லி அவனை சென்ட்ரல் வர செய்து ஊருக்கு அவனிடம் காசு வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.

எங்கள் இருவரின் வாழ்க்கையிலே நடந்த இந்த ஒரு சம்பவத்தை நானும் சரி அவனும் சரி எங்கள் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது.

பின்குறிப்பு: இதை படிக்கும் வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால்,  ரயில் புறப்படும் முன்பு எந்த காரணத்தை கொண்டும் ரயிலை விட்டு தூரமாக செல்ல வேண்டாம்.

No comments:

Post a Comment