ஒரு பெண்ணுக்கு இருவர் போட்டி
காதலியை தனதாக்க ரூ 10,000 பேரம் பேசிய களக்காடு வாலிபர்

காதலியை தனதாக்க ரூ 10,000 பேரம் பேசிய களக்காடு வாலிபர்
ஒருமனிதனை பல விதங்களில் மாற்றக்கூடிய
வல்லமை படைத்தது காதல். முரட்டுகுணம் கொண்டவனை மென்மையானவனாகவும்,
மென்மையான குணம் கொண்டவனை முரடனாகவும் மாற்றக்கூடிய சக்தி காதலுக்கு
மட்டுமே உண்டு.
அதுவும் எதிர்கால வாழ்க்கைக்கு
வித்திடும் வாலிப காதலுக்கு சக்தி அதிகம். உண்மையாக உயிருக்கு உயிராக
காதலிக்கும் எவரும், எதிர்வரும் ஆபத்துபற்றி கவலைப்படுவதே இல்லை. காதலில்
ஒரு வாலிபரை 2பெண்கள் காதலிப்பது, ஒரு பெண்ணை 2வாலிபர்கள் காதலிப்பது
என்பது வழக்கமாக நடப்பது தான். ஆனால் யார் இருவர், வாழ்க்கையில் ஒன்று
சேருகிறார்கள் என்பதை பொறுத்து தான் ஒவ்வொருவரின் காதலின் வெற்றி தோல்வி
நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு வாலிபரை இரு பெண்கள்
காதலிக்கும்பட்சத்தில், காதலனை தனதாக்கிக் கொள்ள போராடுவர். ஆனால்
முடியாதபட்சத்தில் அந்த வாலிபர் யாரை விரும்புகிறாறோ, அந்த பெண்ணுக்கு
விட்டுக்கொடுத்துவிட்டு மற்றொரு பெண் சென்று விடுவார்.
ஆனால்
ஆண்கள் அப்படியில்லை. தான் காதலிக்கும் ஒரு பெண்ணை மற்றொரு வாலிபருக்கு
விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அது சில நேரங்களில் சண்டையிலும் முடியும்.
சமாதானத்திலும் முடியும்.
இப்படித்தான் ஒருபெண்ணை
காதலித்த இரு வாலிபர்கள், அந்த பெண்ணை தனதாக்கிக் கொள்ள, ரூ10,000 பேரம்
பேசியிருக்கிறார்கள். அந்த வாலிபர்களில் ஒருவர், பேசிய பணத்தை
திரட்டுவதற்காக திருட்டில் ஈடுபட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டதால்
தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.
நெல்லையில் தான் இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
நெல்லை
மாவட்டம் களக்காடு தோப்பு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். பஸ் கண்டக்டர்.
இவரது மகன் மணிகண்டண்(வயது20). சம்பவத்தன்று இவர், ஏர்வாடி அருகே உள்ள
திருக்குறுங்குடி திருத்துபனைகிராமத்தில் தண்ணீர் எடுத்துவந்த லென்சா(25)
என்பவரிடம் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச்சென்ற போது, பொதுமக்கள்
கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நகைபறிப்பு
குறித்து புகார் கொடுத்ததன் பேரில் திருக்குறுங்குடி போலீசார்
வழக்குப்பதிந்து வாலிபர் மணிகண்டனை கைது செய்தனர். திருட்டில்
ஈடுபட்டதற்கான காரணம் குறித்து போலீசாரிடம் மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம்
அளித்துள்ளார்.
மணிகண்டனுக்கு சிறு வயதில் இருந்தே
படிப்பில் ஆர்வம் இல்லை. ஆகையால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு,
கோவிலில் சாமி சிலைக்கு அலங்காரம் செய்யும் வேலைக்கு சென்றார். அப்போது
தான் முதன்முதலாக திருடத் தொடங்கியிருக்கிறார் மணிகண்டன்.
கோவிலில்
இருக்கும் சிறிய சிலைகள், பூஜை பொருட்களை திருடிவிற்று, ஆடம்பரமாக செலவு
செய் துள்ளார். வெகுநாட்களுக்கு பிறகு மணிகண்டனின் திருட்டு வேலை
தெரிந்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு தூத்துக்குடியில்
உள்ள தனது மாமாவின் தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்தார். அங்கு ரூ50
ஆயிரத்தை திருடியதால், அந்த வேலையிலிருந்தும் துரத்தப்பட்டார்.
பின்பு
பெயிண்டிங் வேலைகளுக்கு சென்றார். வேலைக்கு செல்லும் வீடுகளில் இருந்து
வெள்ளி, பித்தளைபொருட்களை திருடினார். ஆகையால் அந்த வேலையில்இருந்தும்
மணிகண்டன் துரத்தப்பட்டார். மணிகண்டனுக்கு மாந்தி ரீகத்தில் விருப்பம்
உண்டு. ஆகையால் மந்திரவாதியாக நினைத்தார். அதற்காக தனது அத்தை
வீட்டிலிருந்து தங்கசங்கிலியை திருடி, ரூ30ஆயிரத்திற்கு அடகுவைத்தார்.
அந்த
பணத்தின் மூலம் மாந்திரீகம் செய்யத் தேவையான ஐம்பொன் சிலை மற்றும்
மாந்திரீக புத்தகங்களை வாங்கியுள்ளார். தனது அத்தை வீட்டில் நகைதிருடியது
அம்பலமானதால் குடும்பத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் நகைக்கான
பணத்தை மணிகண்டனின் தந்தை கொடுத்துவிட்டதால் அந்த திருட்டு குறித்து
போலீசில் புகார் செய்யப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து
வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு மணிகண்டன் வேலைக்கு சென்றார். அப்போது
தான் அதே கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணுக்கும், மணிகண்டனுக்கும் காதல்
ஏற்பட்டது. ஆனால் அந்த பெண்ணை வேறொரு வாலிபரும் காதலித்துள்ளார்.
இதனால்
மணிகண்டனுக்கும், அந்த வாலிபருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மணிகண்டனுக்கு தனது காதலியை விட்டுக்கொடுக்க மனமில்லாததால், அந்த
வாலிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 10ஆயிரம் ரூபாய் தந்தால்
மணிகண்டனின் காதலியை மறந்துவிடுவதாக அந்த வாலிபர் கூறியுள்ளார்.
திருடும்
பொருட்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தை உடனே செலவு செய்துவிட்டதால்,
மணிகண்டனிடம் பணம் இல்லை. ஆகையால் காதலியை தனதாக்கிக் கொள்ள மணிகண்டனுக்கு
உடனடியாக ரூ10,000 தேவைப்பட்டது.
அதற்காக
திருட்டில் ஈடுபட முடிவு செய்த அவர், திருக்குறுங்குடி மேற்கு வட்டக்குளம்
கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நகையை பறித்தார். ஆனால் அந்த நகை கவரிங்
நகை. அதன்பிறகு திருக்குறுங்குடி திருத்துபனை கிராமத்தில் தண்ணீர்
பிடித்துவந்த லென்சாவிடம் நகையை பறித்தார். அப்போதுதான் பொதுமக்களிடம்
சிக்கிக் கொண்டார்.
பொதுமக்கள் மணிகண்டன்
பறித்தநகையை வாங்கிக்கொண்டது மட்டுமின்றி நன்றாக தர்ம அடி கொடுத்து
போலீசில் ஒப்படைத்து விட்டனர். இதனைத்தொடர்ந்து மணி கண்டன் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
படம்: எல்லாம் காதலிக்காக, கிளைமாக்ஸ் சீன்..
அந்த வாலிபரும், அந்த பெண்ணும் பார்க்கில், " கண்ணு எனக்கு தெரியும் அந்த
மணிகண்டன் ஒரு திருட்டு பையன் அவன்கிட்ட பணம் கேட்டா திருடத்தான் போவான்,
இப்போ மாட்டிக்கினா பார் இது எப்படி இருக்கு" சேலை மேல முள் விழுந்தாலும்
முள் மேல சேலை வில்லுந்தாலும் கிளியப்போறது சேலைதான் அதனால நாசுக்காதான்
எடுக்கணும். இனி நம்ம காதலை யாராலும் பிரிக்க முடியாது. சுபம்..
காதலியை மணந்தால் இவன் (திருடன்) திருந்தி வாழ வழி உண்டுதான், ஆனால் அவன்
விலை பேசி அல்லவா அவளை வாங்க முயற்சி செய்தான், எனவே இருவருமே அவளுக்கு
பொருத்தம் இல்லை என நான் நினைக்கிறன்.
என்னை பொறுத்தவரை இந்த இருவருமே காதலுக்கு தகுதியற்றவர்கள்! இருவருமே
பணத்திற்காக அல்லல் படுவார்கள். ஒரு திருடனிடம் வாழ்கையை சரிவர ந டத்த
முடியாது, மற்றவனோ பணத்திற்காக மனைவியே விற்க தயங்கமாட்டான்! முடியாது
என்கிற இந்த இருவரிடம் எப்படி அந்த பெண்ணால் வாழ்கை நடத்த முடியும்?????
No comments:
Post a Comment