சமீபத்தில் ஒரு மாலைமலர் வாசகர் ஒருவர் தனது உள்ள கருத்தை வெளிப்படுத்தி
இருந்த விதம் சற்று சிந்திக்கத்தான் வைத்தது. அதன் விவரத்தை இங்கு உங்களோடு
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒரு பெண்ணை தலைவராக கொண்ட கட்சி ஆளும் இந்த நாட்டில், ஒரு பெண்ணை முதல்வராக கொண்ட இந்த தமிழ் நாட்டில், 300 க்கும் அதிகமான பெண்கள் இன்று இடிந்தகரையில் கொளுத்தும் அக்கினி வெயிலில், பச்சை தண்ணீர் அருந்தாமல், தங்கள் மழலைகளின் கதறல்களுக்கு மத்தியில், உண்ணாவிரதம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரை கொடுத்து ஒரு ஜீவமரண போரட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறர்கள். ஆனால், நம் ஆளும் வர்க்கமும், பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும், ஒரு ஒட்டுமொத்த இருட்டடிப்பு செய்து இந்த போராட்டத்தை நசுக்குகிறது. விலங்குகளுக்கு கொடுக்கும் மதிப்புகூட, இந்த மக்களுக்கு நீங்கள் கொடுக்க தயாரில்லை? அப்படி நாங்கள் என்ன தவறு செய்கிறோம்? பல நாடுகளில் நடந்த அணூலை பாதிப்பை அறிந்து, எங்களை, எங்கள் சந்ததியை, எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த அணு உலை வேண்டாம் என்று கோருவது தவறா? அணு உலையை கட்டி முடித்தாகிவிட்டது உற்பத்தி தொடங்க போகிறது எண்ரு நித்தம் ஒரு நாள் குறிக்கின்றீர்கள். அதற்க்கு முன், சர்வதேச விதிமுறைமைகளின்படி எங்களுக்கு பேரிடர், இடபெயர்சி பயிற்சி கொடுங்கள் என்ரு கேட்பது தவறா? இழப்பீடு குறித்த தகவல்களை கேட்பது தவறா? எங்கள் உயிரோடு சம்பந்தபட்ட ஒரு விஷயத்தில் பல தகவல்களை கோருவது தவறா? ஆளும் வர்க்கமே, உங்கள் சுய நலத்திற்க்காக, அன்னிய நாடுகளின் நலன்களுக்காக எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்து, எங்கள் சந்தியின் வாழ்க்கையோடு விளையாடுகிறீர்களே! ஒர் அஹிம்ஷா போராட்டத்தை, பல்முனை தாக்குதல் நடத்தி ஒடுக்குகின்றீர்களே, இதுதான் உங்கள் ஜனநாயகமா? மதிப்பிற்குரிய பத்திரிகை, தொலைகாட்சி ஊடக நண்பர்களே, ஒரு பெண்ணின் மானத்திற்க்கு பங்கம் விளைந்தால், 24௯7 மணி நேரமும் அந்த காட்சியை மீண்டும் மீண்டும் காட்டி அந்த பெண்ணை வன்புணர்சி செய்தததை விட மன உளைச்சலுக்கு உட்படுத்தும் அளவுக்கு விவாதிக்கும், உங்கள் பத்திரிகை தர்மம், இன்று எங்கள் தாய்மாரும், சகோதரிகளும், ஒரு உயிர் போராட்டத்தை நடத்தும் போது, எங்கே போனது? எங்கே ஓடி ஒளிந்து கொண்டீர்கள்? நீங்கள் நினைத்தால், இந்த நாட்டின் மட்டுமல்ல, உலகத்தின் தலைவிதியை மாற்றமுடியும்? அப்படிப்பட்ட நீங்கள் இன்று யாருக்கு பயந்து எங்கள் போராட்டத்தை இருட்டடிப்பு செய்கிறீர்கள்? பயமா அல்லது பணமா? உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும், இது எப்படி பட்ட சக்தி வாய்ந்த, உண்மையான போராட்டம் என்று. அன்று முத்துகுமார் தீக்குளித்தபோது எழுந்த கிளர்சியை, முள்ளிவாய்காலில் லட்சகணக்கான நம் ரத்த உறவுகள் கொல்லபட்டபோது, சில ஊடகங்கள் எதுவுமே நடக்காதுபோல் இருட்டடிப்பு செய்தன. அதேபோல்தான் இடிந்தகரையயும் இருட்டடிப்பு செய்யபோகிறீர்களா? தமிழக மக்களே, செயற்கையாக ஒரு மின்வெட்டை உண்டாக்கி, உங்களை எங்கள் போராட்டத்திற்க்கு எதிராக திருப்பினார்கள். மின்வெட்டு குறைந்து விடும் என்று, இன்று காற்றாலையில் இருந்து வரும் மின்சாரத்தை கட்டுபடுத்த ரகசிய உத்தரவு பிறப்பிக்கின்றார்கள். ஆனால் கூடன்குளம் மின்ச்சாரம் இன்னும் 10 நாட்களுக்குள் தமிழக மின்வெட்டை குறைத்துவிடும் என்று ஒரு பொய் பிரச்சாரம் மேற்கொள்ளபடுகிறது. இதையல்லாம் நம்புவதற்க்கு நாமெல்லாம், உண்மையிலேயெ முட்டாளாக இருக்க வேண்டும், அல்லது முட்டாளாக நடிக்க வேண்டும். நம் அண்டை கேரளதிலிருந்து விரட்டிவிடப்பட்ட அணு உலை இது. ஆனால் கூடன்குளம் அணு உலையிலிருந்து கேரளாவிர்க்கு 500 மெகாவாட் மின்சாரம் வேண்டும் என அந்த முதல்வர் கோருகிறார். ஆந்திரா, கர்னாடகம், கேரளா என்று இந்த அணூலை விரட்டப்பட்ட மானிலங்களுக்கு, இன்று நம் சந்ததியை அழித்து நாம் மின்சாரம் தர தயாராகிறோம். அவர்களோ, காவிரியிலிருந்தோ, பெரியாறிலிருந்தோ, கோதாவரி, கிரிஷ்ணாவிலிருந்தோ ஒரு சொட்டு நீர் நமக்கு தர மாட்டான். இதையெல்லாம் பார்த்து கொண்டு, நாம் எதெயும் எதிர்க்க துணிய மாட்டோம். ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் அமைதியாய் இருக்கும் ஒவ்வொரு நொடியும், எம் போராடும் மக்களின் மரணம் நெருங்கும் நொடி. இன்னும் நீங்கள் அமைதி காத்தால், இந்த அக்கினியில் எங்களை எரித்து அதிலிருந்தும் மின்சாரம் வந்தால், அதையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment