Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Sunday, 27 May 2012

பிரயோசனமானத் தளங்கள்

உங்கள் IP இலக்கம்

உலகில் இருக்கும் எண்ணற்ற கணனிகளில் இருந்து ஒவ்வொரு கணனியையும் வேறுப்படுத்தி அறிந்துக்கொள்வதற்கு, இணைய இணைப்பை இணைத்தவுடன் சேவை வழங்கிகளால் ஒரு IP இணைய இலக்கம் வழங்கப்பட்டு அதினூடாகவே எமக்கு இணைய சேவை வழங்கப்படுகிறது.

அவ்வாறு நமக்கு வழங்கப்படும் இணைய இலக்கத்தை நாம் கீழே உள்ள தளங்களினூடாக அறிந்துக்கொள்ளலாம்.

http://whatismyip.com/

http://whatismyipaddress.com/

http://www.ipchicken.com/

ஒரு கணனியின் IP விலாசம் உட்பட ஊர் மற்றும் அதன் சேவை வழங்கிகளின் விபரங்களையும் அறியத்தரும் இணையத்தளங்கள்.

http://www.ip2location.com/

http://www.ip-adress.com/ipaddresstolocation/

http://www.geobytes.com/IpLocator.htm?GetLocation

ஒரு இணையத்தளத்தைப்பற்றிய விபரம்

ஒரு இணையத்தளத்தை யார் இயக்குகிறார்கள், எங்கிருந்து இயக்குகிறார்கள், அதன் உரிமையாளர் யார் என்பதை அறிந்துக்கொள்வதற்கு அந்த இணையத்தளத்தின் பெயரை WHOIS Search பக்கம் ஆங்கிலத்தில் பிழையின்றி இட்டு Seacch எனும் அழுத்தியை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்டத் தளத்தின் முழுவிபரத்தையும் அறிந்துக்கொள்ளலாம்.

http://www.networksolutions.com/whois/index.jsp

IP இலக்கத்தை மறைப்பதற்கு

உங்கள் கணனியின் IP இலக்கத்தை அறிந்துக்கொண்டால் உங்கள் கணனியின் வழங்கி உற்பட உங்களது முழுவிபரத்தையும் பெற்றுக்கொள்ளலாம். ஏன் உங்கள் வீட்டு விலாசத்தையே அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படியானால் உங்கள் கணனியின் IP இலக்கத்தை மற்றவர்கள் பார்க்காமல் மறைக்க என்ன செய்யலாம்? இதோ இந்த இணையத்தளம் அதற்கான சேவையை வழங்குகின்றது.

http://www.ip-adress.com/hide_my_ip/

உங்கள் கணனியின் வேகம்
உங்கள் கணனியின் பதிவிறக்கம் Download செய்யும் வேகம்,
பதிவேற்றும் Upload வேகம் போன்றவற்றை அறிந்துக்கொள்ள உதவும் இணையத்தளம்.

http://www.ip-adress.com/speedtest/

வீடியோ கிளிப்புகள்

வீடியோ கிளிப்புக்களை பார்ப்பதற்கு யூ டியூப் மற்றும் ஈழம் வீடியோ போன்று வேறு சிலத் தளங்கள்.

http://www.dailymotion.com/

http://www.burlysports.com/play/channel/89196

நேரடி ஒலி ஒளி பரப்பு

நிகழ்வுகளை நேரடியாக உங்கள் அழைப்பேசியின் ஊடாகவே ஒலி ஒளி பரப்புச் செய்ய:

http://qik.com/

நேரடி கிரிக்கெட் நிகழ்ச்சிகள்

கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளை நேரடியாக பார்வையிடுவதற்கு. இங்கிருக்கும் சில மென்பொருற்களை பதிவிறக்கி பார்வையிடலாம்.

http://www.sopcast.com/

நேரடி சன் டீ வீ

Sun TV போன்ற சில தமிழ் தொலைக்காட்சி சேவைகளை நேரடியாகப் பார்வையிடக்கூடிய தளங்கள்.

http://www.vaanam.com/

http://www.isaitamil.net/ (இத்தளத்தில் பதிவு செய்து பார்க்கவேண்டும்)

ஞாபகப்படுத்தும் இணையத்தளம்

செய்யவேண்டி இருப்பவற்றை மறக்காமல் இருப்பதற்கு நினைவூட்டும் ஒரு இணையத்தளம்.

http://www.tadalist.com/

இன்றைய நாணயப் பெறுமதி

இன்றைய Currency Rate எவ்வளவு என்பதை துள்ளியமாக அறிந்துக்கொள்வதற்கு.

http://www.xe.com/

இலவச இணையத் தொலைப்பேசி

இலவசமான தொலைப்பேசி வசதிகளை ஏற்படுத்தித்தரும் இணையத்தளங்கள்.

http://www.cheapvoip.com/

http://www.voipcheap.com/en/index.html

http://www.myvoipprovider.com/blogcategory/Betamax/

http://www.softonic.com/

நாள்காட்டி
நாள்காட்டி இணையத்தளம். இந்த நாள்காட்டியில் இன்றைய நாளை சொடுக்கினால் இன்றைய நாளின் பிரசித்திப்பெற்ற நபர்களின் விபரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அறிந்துக்கொள்ளலாம்.

http://www.infoplease.com/calendar.php

தனிம வரிசை அட்டவணை

தனிம வரிசை அட்டவணைகளை பார்வையிடுவதற்கு.

http://www.shivamaha.com/chemistry/elements.htm

http://code.jalenack.com/periodic/

நச்சு நிறல்களின் பட்டியல் (வைரஸ்)

500.000 க்கும் மேற்பட்ட நமது கணனி பாவனையில் பாதிப்புக்களை உண்டு பன்னும் வைரஸ்களின் பெயர் விபரங்களையும் அதற்கான சிறந்த எண்டி வைரஸ்களையும் பற்றிய விபரங்களை தரும் இனையத்தளம்.

http://www.av-comparatives.org/

கணனி நோட்டம்

Firewall உடன் இணைக்கப்படாத ஒரு கணனியில் இருக்கும் தகவல்களை அறிய விரும்பினால் அக்கணனியின் IP Address சை மட்டும் அறிந்துக்கொண்டால் போதும். அதனை எடுத்துக்கொண்டு LAN card security scanner எனும் மென்பொருளை பதிவிறக்கி அதனுள் எங்களுக்கு தேவையான கணனியின் IP இலக்கத்தை இடுவதன் மூலம் அக்கணனியில் நடைப்பெறும் நிறையவே விடயங்களை அறிந்துக்கொள்ளலாம். அம்மென்பொருளிற்கான தளம்.

http://www.gif.com/

கணனி பாதுகாப்பு

இலவச மற்றும் வர்த்தக Firewall மென்பொருற்களை பதிவிறக்கி உங்கள் கணனிகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு.

இதிலிருக்கும் இன்னொரு நன்மை என்னவன்றால் நமக்கு வரும் தேவையற்ற மின்னஞ்சல்களை வடிக்கட்டி தானாகவே கட்டுப்படுத்திக்கொள்ளும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

http://www.zonealarm.com/store/content/home.jsp

http://www.zonealarm.com/store/content/catalog/catalog_main.jsp

எழுத்துருவாக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு

ஒவ்வொரு மொழியிலும் எத்தனையோ விதவிதமான எழுத்துருக்கள் உள்ளன. இப்படியான அழகிய எழுத்துருக்கள் பார்ப்பவரை கவரும் விதமாக இருக்கும். தமிழிலும் எத்தனையோ விதவிதமான அழகிய எழுத்துருக்களை காண்கின்றோம். உங்களுக்கும் அழகிய தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதில் ஆர்வம் இருக்குமாயின் நீங்களும் ஒரு முறை முயன்று பார்க்கலாம்.

http://www.myfirstfont.com/

அழகிய 124 விதமான தமிழ் எழுத்துருக்கள்
தமிழில் அழகழகான 124 தமிழ் எழுத்துருக்களை [Tamil Fonts] சிவம் என்பவர் வடிவமைத்துள்ளார். அவற்றை இத்தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.pcpages.com/sivam/index.html

Favlcon ஐகொன்
இன்று சில இணையத்தள உலாவிகளைப் பார்த்தீர்களானால்
உலாவியின் முகவரியுடன் ஒரு சிறிய ஐகொன் தென்படும். அதை ஆங்கிலத்தில் Favlcon Icon என்று அழைக்கின்றனர். நீங்கள் விரும்பினால் உங்கள் இணைய முகவரியுடன் இந்த Favlcon ஐகொன் ஒன்றையும் நிறுவிக்கொள்ளமுடியும். இதோ அதற்கான தளங்கள்.

http://www.favicon.co.uk/

http://tools.dynamicdrive.com/favicon/

விமான நிலையங்கள் விபரம்

இலங்கை விமான சேவை கோட் என்றால் SL. ஹொங்கொங் விமான சேவை கோட் என்றால் HK என்பதுப்போல், ஒவ்வொரு நாட்டு விமான சேவைக்கும் விமான சேவை கோட், விமான நிலய கோட் மற்றும் வானூர்தி கோட் போன்றவை இருக்கும். இதை வைத்து ஒரு விமான சேவை மற்றும் அதன் விபரங்களை அறிந்துக்கொள்ளலாம். அவ்வாறு உலகில் உள்ள அனைத்து விமான நிலைய கோட் மற்றும் விபரங்களையும் இதோ இந்த தளத்தில் பார்வையிடலாம். அகரவரிசையில் அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளன.

http://www.world-airport-codes.com/alphabetical/country-name/a.html

இனியனின் எழுத்துப்பெயர்ப்பு செயலி

இந்திய மொழியில் அமைந்த ஒருங்குறி உரையை இடப்பக்க பெட்டியில் ஒட்டி 'மாற்று' எனும் பொத்தானை அழுத்தினால், அது எழுத்துப்பெயர்க்கப்பட்டு வலப்பக்க பெட்டியில் தமிழில் காட்டும் அருமையான செயலி

இக்செயலி இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், ஒரியா, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.

http://transliterator.blogspot.com/

இந்த எழுத்துப்பெயர்ப்புக் கருவியை உருவாக்கியவரின் கருத்துக்களை அறிய இங்கே அழுத்திப் பாருங்கள்.

போட்காஸ்ட் மற்றும் பாடல் கோப்புகளை வலையேற்றல்

பாடல்களை வலையேற்றவதற்கும் வலையேற்றிய பாடல்களை வலைப்பதிவுகளில் தவழ விடுவதற்கும் சிறந்த தளம்.

http://odeo.com/

லேனா தமிழ்வாணனின் மின்னூல்

லேனா தமிழ்வாணனின் "நீங்கள் ஓர் ஒரு நிமிட சாதனையாளர்" எனும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் பயனுள்ள ஆக்கங்களை கீழே சொடுக்கி பார்க்கலாம். இவை PDF கோப்புகளாக உள்ளன.

http://static.scribd.com/docs/3s74g6o8yhuio.pdf

ஒரே உலக நாணயம் Single Global Currency

அமெரிக்காவில் டொலர், ஐரோப்பாவில் யூரோ இலங்கையில் ரூபா என்று ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு நாணயம் பயன்படுகின்றன. இந்நிலையை மாற்றி எல்லா நாடுகளுக்கும் ஒரே நாணயத்தை உருவாக்குவது பல வழிகளில் நன்மை பயக்கும் என ஒரு இணையத்தளம் கூறுகிறது. Single Global Currency எனும் இந்தக் கொள்கையை 2025 க்குள் அமுல்படுத்துவது பற்றி அக்குழு ஆராய்ந்து வருகிறது. இது எந்த அளவிற்கு ஏற்புடையது என்பதை பொருத்திருந்துத் தான் பார்க்கவேண்டும். மேலதிக விபரங்களை அத்தளத்திற்கு சென்று அறிந்துக்கொள்ளுங்கள்.

http://www.singleglobalcurrency.org/

கோப்புகளை பதிவேற்றிவைப்பதற்கான தளங்கள்

எமது பத்திரக்கோவைகள், நிழல்படங்கள், ஒலிப்பதிவு போன்றவற்றை இந்த இணையத்தளங்களில் பதிவேற்றி வைத்துக்கொண்டால், நமக்கு தேவையான போது தேவையான இடத்தில் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இது இன்றைய இணைய பாவனையில் ஒரு இன்றியமையாத சேவையாகும். இந்த சேவையை வழங்கும் இணையத்தளங்கள். 5 GB வரையான இடத்தை இலவசமாகத் தருகின்றன.

குறிப்பு: Private, Public என்று போடப்பட்டுள்ள இடத்தில் உங்களது கோப்புகளை பிறர் பார்க்காமல் இருக்கவேண்டும் என்றால் Private எனும் இடத்தில் ஒரு சொடுக்குப் போட மறவாதீர்கள்.

http://www.rapidshare.de/

http://www.4shared.com/

வரையரையற்ற இடவசதியை தரும் ஒரு இணையத்தளம்.

http://www.uploading.com/

எக்ஸல் கடவுச்சொல்லை மறந்திவிட்டீர்களா?

எம் எஸ் எக்ஸல் சீட்டில் உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? அப்படியானால் இந்த தளம் அக்கடவுச்சொல்லை நீக்கி உங்கள் கோப்புகளை பார்ப்பதற்கான வசதியை வழங்குகிறது. அதற்கான மென்பொருளை பதிவிறக்கி பயன்படுத்தலாம்.

http://www.straxx.com/excel/password.html

தவறுதலாக அழிப்பட்ட கோப்புகளை மீட்க
MP3, ஐபொட், டிஜிட்டல் கெமரா போன்றவற்றில் உள்ள கோப்புகள் தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டால், அவற்றை மீற்க இந்த மென்பொருளின் உதவியை நாடலாம்.

http://www.recuva.com/

குப்பைத்தொட்டியிலிருந்தும் அழிக்கப்பட்ட கோப்புகளை எவ்வாறு மீட்கலாம்?
உங்கள் கணனியில் இருக்கும் கோப்புகளை குப்பை தொட்டியிலிருந்தும் அழித்துவிட்டப் பிறகு, அக்கோப்புகளை எப்படி மீட்பது என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? இதோ இந்த தளம் உங்களுக்கு கைகொடுக்கும்.

http://www.snapfiles.com/get/restoration.html

ஒரு கணனியின் செயல்பாடுகளை அவதானிக்க

ஒருவருடைய கணனியில் ஒரு நபர் என்னென்ன செய்கிறார்? என்னென்னெ தட்டச்சுகிறார்? என்று அனைத்து செயல்பாடுகளையும் அந்நபர் அறியாமலேயே அவதானிக்க விரும்புகின்றீர்களா? கீழ் உள்ள தளத்தில் இருக்கும் மென்பொருளை அக்கணனியில் நிறுவி விட்டீர்களானால் போதும், அக்கணனியில் நடைப்பெறும் ஒவ்வொரு அசைவுகளை மட்டுமல்ல அவர் தட்டச்சுப்பலகையில் தட்டும் ஒவ்வொரு எழுத்துக்களையும் கூட அவதானிக்கலாம்.

அதேவேளை வேறு யாரும் இது போன்ற ஒரு மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவி உங்களை அவதானிக்காமல் இருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு நிறுவி விட்டால் உங்களது ஒவ்வொரு அசைவுகளையும் உங்கள் கணனியிலிருந்தே மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளும் மிக அதிகமாகவே உள்ளன.

http://www.refog.com/keylogger/

http://www.revealerkeylogger.com/

யாழ் கருத்துக்களம் - தேவகுரு

கணனி திருத்துதல் (Trouble Shooting) தொடர்பான சிறப்பான விளக்கங்களை யாழ் கருத்துக்களத்தில் தேவகுரு என்பவர் வழங்கி வருகின்றார். இணையத்தில் வேறு எந்த தளத்திலும் காணப்படாக பயன்மிக்கத் தகவல்கள் அவை. (அவரது தகவல்கள் 2003 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வருவதால், நிகழ்காலத்துக்கு பயன்படக்கூடிய தகவல்களைத் தேடிப் பயன்பெறுங்கள்.)

அவரின் உழைப்புக்கு வாழ்த்துக்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14994

நன்றி

Wednesday, 23 May 2012

கிராமத்துப் பாரிஜாதமா ?? நகரத்துப் பிரதிக்க்ஷா வா?

கிராமத்துப் பொண்ணா ? நகரத்துப் பொண்ணா ? இதுல, எந்தப் பெண் உனக்கு மனைவியாக வரணும்னு ஆசைப்படுவ ? என்று ஆண்களிடம்(தமிழக) ஒரு கேள்வி கேட்டால், பெரும்பாலானவர்களிடமிருந்து, கிராமத்துப் பொண்ணு தான் என்று சடார்னு ஆணித்தரமா பதில் வரும்.

அது என்னடா பொண்ணுல, கிராமத்துப் பொண்ணு, நகரத்துப் பொண்ணு அப்படிங்குற வித்யாசம். இதுல நம்மாளுக்கு ஏன் கிராமத்துப் பொண்ணு மேல அப்படி ஒரு பிரியம், நகரத்துப் பொண்ணு மேல அப்படி ஒரு வெறுப்பு என கொஞ்சம் அலசுவோம்.

கடைசியில் போட வேண்டிய டிஸ்கிய பதிவிலேயே சொல்லிடுறேன். பொதுவாக ஆண்களின் எண்ணத்தில் நிலவிக் கொண்டிருக்கும் சில விஷயங்களை அலசுவதே இப்பதிவின் நோக்கம். எல்லா ஆண்களும் இப்படித்தான்னு நான் சொல்ல வரலைங்க. எல்லா கிராமத்துப் பொண்ணும் இப்படித்தான், எல்லா நகரத்துப் பொண்ணும் இப்படித்தான்னு சொல்ல வரல.
ஆலமரம், நாட்டாமை, சொம்பு எல்லாம் இங்க இல்லை என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் : ).

சரி மேட்டர்க்கு வருவோம்.

பொதுவாகவே ஒரு மெண்டாலிட்டி. கிராமத்துப் பொண்ணுன்னா(பாரிஜாதம்), அடக்க ஒடுக்கமா இருப்பாள், குடும்பத்து நிலைமையை அனுசரிச்சு நடந்துப்பாள், சொந்த பந்தங்களிடம் நன்றாக நடந்துப்பாள், உள்குத்து வெளிக்குத்து தெரியாத வெகுளியா இருப்பாள். மொத்தத்தில எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டாள். சந்தோஷமா குடும்பத்தை ஓட்டலாம் என்பது நினைப்பு.

நகரத்துப் பெண் (பிரதிக்க்ஷா), ஈகோ புடிச்ச பொண்ணு, ரூல்ஸ் பேசுபவள்.குடும்பத்தை அனுசரிக்கத் தெரியாதவள், உள்குத்துக்களின் ராணி, கூட்டுக் குடும்பத்தினை உடைக்க வந்த உளவாளி. கிட்ட தட்ட, ஆப்பைத் தேடி தானே உட்கார்ந்து கொள்வது மாதிரி நினைக்குறாங்க.

இந்த மாதிரி ஒரு definition கொண்ட பெண் தான் கிராமத்துப் பெண், நகரத்துப் பெண் என ஸ்ட்ராங்கா மண்டையில ஏற்றிவிட்டிருக்காங்க. சும்மா ஒரு அடையாளத்துக்குத் தான் இந்த கிராமத்துப் பெண்,நகரத்துப் பெண் என்ற பெயர்களெல்லாம். எல்லா ஊர்களிலும் இவ்விருவரும் இருக்காங்க.

கிராமத்துப் பொண்ணு, நகரத்துப் பொண்ணு சாதக-பாதகங்கள் என்ன ? ஏன் நம்மாளு கிராமத்துப் பொண்ண prefer பண்றார்னு பார்க்கலாம்.

ஏன் மா, இன்னைக்கு சனிக்கிழமை...வீக் எண்ட்... பீச் போகலாமா...?
பாரிஜாதம் : ஹ்ம்ம் போகலாங்க...!
(பட்ஜெட் பத்மனாபி : ) )
பிரதிக்க்ஷா :பீச் வேணாம்ங்க....முதல்ல கிளம்பி, பிட்சா கார்னர் போயிட்டு ஒரு Combo Pack முடிச்சிட்டு...அப்புறம் மாயாஜால் போயிட்டு சினிமா பார்த்துட்டு, அப்படியே வரும்போது அஞ்சப்பர்ல டின்னர் முடிச்சுட்டு வந்துடுலாம்ங்க...
(ராயல் சீமா ராஜலக்ஷ்மி : ) )

என்ன மா, நேத்து வச்ச, அதே குழம்பை ஃப்ரிட்ஜ்ல வச்சி கொடுக்குற, வேற செய்யக் கூடாதா ?
பாரிஜாதம் : கடைக்குப் போகணும். வீட்ல ஒண்ணுமே இல்லை. உங்க கிட்ட நேத்தே சொன்னேன் நீங்களும் மறந்துட்டீங்க.
பிரதிக்க்ஷா :ஏன், இதுக்கு முன்னாடி நேத்து வச்ச குழம்பு, நீங்க சாப்பிட்டதே இல்லையா ? அவ்வளவு பாக்குறவர், நேத்தே, நான் கேட்டதை வாங்கிட்டு வர வேண்டியது தானே...!

எங்க அக்காவோட கல்யாண நாள் வருது. புடவை எடுத்துக் கொடுக்கலாம்னு இருக்கேன்....நீ வர்றீயா...
பாரிஜாதம் :நான் வர்றேங்க....உங்க அக்கா கிட்ட சிவப்பு கலர், ராமர் கலர் புடவை எல்லாம் இருக்கு, மயில் கழுத்துக் கலர்ல வஸ்திரகலா பட்டு எடுத்துக் கொடுப்போம்ங்க. போத்தீஸ் போலாம்...
பிரதிக்க்ஷா : ஹ்ம்ம்...வர்றேங்க...உங்க அக்காவுக்கு ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்ல போய் ஒரு அருமையான காட்டன் சேரி எடுத்துட்டு....அப்படியே அங்க இருந்து நல்லி சில்க்ஸ் வந்து, எங்க அம்மாவுக்கு ஒரு சில்க் காட்டன் புடவை எடுத்துட்டு வரலாம்ங்க...
இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட, கிராமத்துப் பெண்ணின் அணுகுமுறையும், நகரத்துப் பெண்ணின் அணுகுமுறையும் பெருமளவு வித்தியாசமா இருக்குங்க. அதுல கிராமத்துப் பெண்ணின் அப்ரோச் நல்லா இருக்க மாதிரி தெரியுது.
சரி இதையெல்லாம் ஒரு புறம் யோசிச்சுப் பார்த்தாலும், நமக்குள்ள ஒரு சின்ன டவுட்...
நம்மாளு பயப்படுறாரோன்னு ஒரு சந்தேகம். இன்றும் கூட, பொதுவாகவே பெண் தேடும் போது தன்னைவிட குறைவா படிச்ச, தன்னைவிட குறைவா சம்பாதிக்குற பெண்ணைத் தான் நம்மாளு தேடுவார். இது தான் பேசிக் மாதிரி ஆயிடுச்சு. ஆக, தன்னைவிட எதிலும் உயர்வான பெண்ணை ஏற்றுக் கொள்ளும் மனம் வரவில்லையோ ?
அதுவும் இல்லாம, நம்முடைய வீட்டு சூழல் பார்த்தீங்கன்னா, நம்ம அப்பா, அம்மாவை பார்த்து வளருகிறோம். பெரும்பாலான, வீடுகளில் அப்பா ரொம்ப டாமினண்ட் இருப்பார்(அந்த காலத்துல). அம்மா அமைதியா அப்பா சொல்லை எதிர்த்துப் பேசாமல், அப்படியே நடக்கக் கூடியவராக இருப்பார். அதைப் பார்த்தே வளர்ந்த நம்மாளு, நமக்கு வரப் போகின்ற மனைவியும் கிட்ட தட்ட அதே மாதிரி வேணும்னு எதிர்ப்பார்க்குறான்னு நினைக்கத் தோணுது.
குடும்பம் நடத்துறதுல இரண்டே ஆப்ஷன்ஸ் தான். ஒண்ணு, சிதம்பர ஆட்சின்னு நாம சொல்றது. அதாவது ஆண் தான் CEO. இன்னொன்று மதுரை ஆட்சி,அதில் பெண் தான் CEO. ஒரு நாட்டுக்கு ஒரு பிரதமர்,ஒரு அதிபர் மாதிரி, ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைவர் தான். இந்த வகையில் பார்க்கும் போது, கிராமத்துப் பெண்ணை மணந்தால், அந்தத் தலைவர் பதவி நமக்கே கிடைக்கும் என்று நம்மாளு நினைக்கிறாரோ? நம்மாளு தான் CEO என்றால், கூட்டுக்குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு.
இப்படி நம்மாளு கிராமத்துப் பெண்ணைத் தேடுவதில் பல காரணங்கள் இருக்கு.
பெண் என்று பார்த்தால் அனைவரும் ஒன்று தான். எல்லோருக்கும் கிட்ட தட்ட ஒரே மாதிரியான குணம் தான். ஆனால், அதனை வெளிப்படுத்தும் முறைகளில் தான் மாற்றமே தவிர, அடிப்படையில் இருவருமே ஒரே மாதிரி தான்!
சரி, கடைசியா ஒரே ஒரு கேள்வி, பார்த்திபன் கனவுல உங்களுக்கு புடிச்சது (பாரிஜாதம்)சினேகாவா ?
(பிரதிக்க்ஷா) சினேகாவா?

சலிப்பை ஏற்படுத்தும் "நைட்டி" கலாச்சாரம் !

இதுக்கெல்லாம் ஒரு பதிவு போடணுமா, அப்படின்னு தான் தோனுச்சு முதல்ல....சரி, பரவால்ல... பதிவு போட்டு தான் பார்ப்போம்...ஆதரவு இருக்கான்னு பாப்போம்னு தோனுச்சு...அதான்..இந்த பதிவுக்கு முதலில் "கணவனைக் கடுப்பேத்தும் நைட்டி " நு தான் பேர் வச்சேன். ரொம்ப ஓவரா இருக்குமோன்னு லைட்டா மாத்திட்டேன் !

யார் கண்டுபிடிச்சு, எப்படி வந்ததோ தெரியல இந்த ஆடை நைட்டி. "நைட்டி" என்ற பெயரே, இரவிலே அணியும் ஆடை என்று பொருள் தந்தாலும், இன்றைய பெண்கள், இரவு பகல் என பாராமல் எப்போதுமே இதே ட்ரெஸ்சை அணிந்து கடுப்பு ஏத்துறது எல்லா வீட்லயும் இருக்குற ஒரு மேட்டர்.


அப்படி என்ன தான் பெண்களுக்கு இந்த நைட்டி புடிச்சு இருக்குன்னு, பெண்கள் கிட்ட கேட்டோம்னா, இதோ இந்த மாதிரி பதில் தான் வரும்.

1. ரொம்ப comfortable ஆன டிரஸ்.
2. விரசம் இல்லாத உடை, உடலை முழுவதும் கவர் செய்யுற மாதிரியான உடை (நம்ம ஊர்ல இருக்குற நைட்டிகள்).


இந்த ரெண்டு விளக்கங்களை தான் கொடுப்பாங்க.

சரி..அது இருக்கட்டும், நைட்டி மேல இவனுக்கு ஏண்டா இவ்வளவு கடுப்புன்னு நினைக்கலாம்.இதோ வரேன்...

1. என்ன மாதிரி டிசைன் நைட்டியா இருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்த நைட்டியா இருந்தாலும், கண்ணுக்கு ஒரே மாதிரி தான் தெரியும்.

கேஸ் சிலிண்டர்க்கு பூப்போட்ட துணி சுத்தி வைச்சு, கொஞ்சம் நகர்ந்து நின்னு வேடிக்கை பாருங்க...நிச்சயமா பொண்ணு ஒண்ணு நைட்டில இருக்க மாதிரியே இருக்கும். ஏன்னா அந்த ஆடையினுடைய அமைப்பு அப்படி! தொள தொள ந்னு ஒரு கை, அங்க அங்க பூ பூ வா துணி, இப்படி கிட்ட தட்ட ஒரு ஜோக்கர் டிரஸ் மாதிரி தான் இருக்கு. இதையே மாசக் கணக்குல போட்டுக்கிட்டு இருந்தா மனுஷனுக்கு வெறுப்பு வருமா வராதாங்க?
(ஜின் ஜினுக்கா சின்னக் கிளி, சிரிக்கும் பச்சைக் கிளி, ஓடி வந்தா மேடையிலே ஆட்டம் ஆட.....)

2. பொதுவா பார்த்தோம்னா, ஒவ்வொரு பெண்களுக்கு ஒவ்வொரு உடை பொருத்தமாக அமையும். ஒரு சில பெண்களுக்கு சுரிதார் போட்டா அழகா இருக்கும், இன்னும் ஒரு சிலருக்கு மாடர்னா, ஜீன்ஸ் - டீ ஷர்ட் போட்டா அழகா இருக்கும். எந்த பர்ஸ்னாலிட்டி உள்ள பெண்ணா இருந்தாலும், சேலையில ரொம்ப அழகா தெரிவாங்க. ஆனா பாருங்க, எவ்வளவு அழகா இருக்குற பொண்ணும், இந்த நைட்டிய போட்டா, கொடுமையா இருக்க மாதிரி தான் தெரியும்.


3. நைட்டியை உபயோகப் படுத்துறத தப்புன்னு சொல்ல வரலீங்க. இரவுல உபயோகப்படுத்தலாம், இல்ல பகல் நேரங்களில் கூட எப்பவாச்சும் உபயோகப்படுத்திக்கலாம். அதுக்காக் காலையில இருந்து இரவு வரைக்கும் நைட்டியே போட்டுட்டு இருந்தா சலிப்பு வருவது இயல்பு தானங்க ?

பல கடுப்புகள்ல வேலையில இருந்து வீட்டுக்கு வருகிற கணவன் கண்களில் ஓரளவுக்கு சுமாரா இருக்கனும்னு, இப்ப இருக்கிற படித்த நகரத்து பெண்கள் பலருக்கு தெரிவதில்லை. இவங்க தானே வர்றாங்க.இதுக்கு நைட்டியே போதும். இப்படி தான் பலரோட எண்ணம். இந்த விஷயத்துல கிராமத்து பெண்கள் சூப்பர், தங்களுக்கு உள்ள சாதாரண வாய்ல் புடவைய கட்டிக்கிட்டு, முகம் கழுவி, தலையில மல்லி பூ வச்சிட்டு, சிரிச்ச முகத்தோட, இந்தாங்க காபி ந்னு கணவர் கிட்ட கொடுக்குறது....அடேங்கப்பா......அதெல்லாம் இந்த நைட்டி தேவதைகள் கிட்ட கிடைக்குமா?

(ராஜ்கிரண் ஸ்டையில்ல பெண் மனசு ஆழமுன்னு...
"கல்லானாலும் கணவன், சிறு புல்லானாலும் புருஷன்....கல் இல்லையே இந்த மகன் கல் இல்லையே.....")
4. கடைத்தெருவிற்கு போனால், மணிகணக்குல, கடை கடையா ஏறி சுரிதார், புடவைன்னு எடுத்து கொடுக்குறோம். அதுக்காச்சும், கொஞ்சம் மனசாட்சியோட,இதையெல்லாம் உபயோகப்படுத்தக் கூடாதா ? வீட்ல எவ்வளவோ சுரிதார் இருந்தும், எவ்வளவோ புடவைகள் இருந்தும், பெண்களுக்கு வீட்டில் நைட்டி தான் எல்லாமே !
இதுல ஏன்னு கேட்டா, அவங்க சொல்ற reason வீட்ல தானே இருக்கேன், எங்கயாச்சும் வெளில போகும் போது பாத்துக்கலாம். மனைவியின் அழகை கணவன் ரசிப்பதற்கு, எதாச்சும் விசேஷம் வருமா, சேலை கட்டுவாங்களா ந்னு காத்து இருக்க வேண்டிய அவல நிலையில கணவர்கள் இருக்காங்க !
(லிவிங்க்ஸ்டன் ஸ்டையில்ல..
"ஜனாதிபதி முருகேசன் வாழ்க...வருங்கால ஜனாதிபதி முருகேசன் வாழ்க..." என்னம்மா பீல் பண்ணி கூவுறான் பாருடா..)

5. இதே மாதிரியான நிலைமை தொடர்ந்தால், "கடைசியா மனைவியை சேலையில் பார்த்தது மணவறையில் தான்னு" சொல்ற அளவுக்கு போயிடும் போல இருக்கு நிலைமை !
கனவிலேயும் மனைவியே.. வருவது கஷ்டமான விஷயம் தான். ஆனா, அந்த கனவிலும், மனைவி நைட்டி போட்டுட்டு வர்றது..அப்பப்பா...என்ன கொடுமை சார் இது.
என்ன தான் நாகரிகம், அது இதுன்னு பேசினாலும், நம்ம ஆளுங்க எந்த ஊரில, எந்த நாட்டுல இருந்தாலும், பொண்ணு பாக்கணும், கல்யாணம்னு தோனுச்சுன்னா உடனே புறப்புட்டு நம்ம ஊர்ல வந்து தான் தேடுவாங்க. அந்த ஊர்களில்,நாடுகளில் இல்லாத பெண்களா... அதை எல்லாம் மீறி இங்க வந்து பொண்ணு எடுக்குறாங்கன்னா...அதுக்கு முக்கிய காரணம், நம் நாட்டினுடைய கலாச்சாரமும் பழக்க வழக்கமும் தான்.
தயவு செய்து இதுக்கெல்லாம் பழமைவாதம்,பெண்ணடிமை,ஆணாதிக்கம், பிற்போக்குத்தனம்னு சொல்லி வாழ்க்கையில இருக்க சின்ன சின்ன சந்தோஷத்த கூட அனுபவிக்க முடியாம பண்ணிடாதீங்கோ !

(ஏங்க... பேச்சு பேச்சோட இருக்கணும், பூமில இருக்குறத எல்லாம் கெளறப்டாது ! )

ஆபீசுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு விடுற மாதிரி, நைட்டிக்கும் ஒரு ரெண்டு நாள் லீவு விட்டா நல்லா இருக்கும்னு நினைக்குது கணவர்கள் சங்கம்.
ஆதரிக்குமா மனைவியர் சங்கம் ?
இந்த மாதிரி கொட்டி தீர்த்து பேசி இருப்பது, நைட்டி உடை மேல இருக்க சலிப்பும் வெறுப்பும் தானே தவிர, பெண்களை புண்படுத்த அல்ல ! அதனால கோச்சிக்காதீங்கோ !

Nandri kabilan sir

Tuesday, 22 May 2012

குறைந்த மின் அழுத்தத்தால் தூக்கத்தை இழுந்த மக்கள்: டிவி, பிரிட்ஜ், கம்ப்யூட்டர்கள் பழுதாகும் அவலம்

 
தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், சுழற்சி முறையில் மின்வெட்டு, அமல்படுத்தப் படுகிறது. காற்றாலை மின்சாரம் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் காற்றின் வேகம் அவ்வப்போது மாறுவதால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

சென்னை உள்பட சில நகரங்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு அமலில் இல்லை என்றாலும், குறைந்த மின் அழுத்தம் பொதுமக்களை பாடாய்படுத்துகிறது. குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏசி மிஷின்கள் இயங்குவதில்லை. மின் விசிறிகள் மெதுவாக சுற்று கிறது. இதனால் காற்று வராமல், இரவில் தூங்க முடிவதில்லை.

கோடை காலம் தொடங்கியது. முதலே, இந்த இம்சை ஆரம்பமாகி விட்டாலும், அக்னி நட்சத்திரம் ஆரம்ப மானதும் வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை. பகலில் மட்டுமில்லாமல் இரவிலும் வியர்வையில் குளிக்க வேண்டி இருக்கிறது. வீட்டுக்குள் நிலவும் உஷ்ணத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தூக்கத்தை இழந்துள்ளனர்.

பெரும்பாலானோர் இரவில் அதிகபட்சமாக 4 மணி நேரம் கூட தூங்குவதில்லை. இவ்வளவு நேரம் தூங்கினால், அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும். இரவில் தூக்கத்தை தொலைப்பவர்கள், பஸ், ரெயிலில் பயணம் செய்யும் போதோ, அலுவலகத்தில் வேலை செய்யும் போதோ தூங்கி வழியும் நிலை ஏற்படுகிறது.

இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால், பெரும் பகுதியினர் மினிவிசிறி ஏசி போன்ற குளிரூட்டும் சாதனங்கள் இயங்காததால் தூக்கத்தை இழந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

சென்னை நகரில் பல பகுதிகளில் மின் அழுத்தம் சீராக இல்லை. இதனால், மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் பழுதாகின்றன. ஏசி, மிஷின், மின்விசிறி, பிரிட்ஜ், லேப்-டாப், கம்ப்யூட்டர், டிவி, வாஷிங்மிஷின், மிக்சி, மின் மோட்டார்கள் உள்ளிட்ட மின்சாரத்தில் இயங்கும் அனைத்தும் பழுதாகின்றன. பல வீடுகளில் டியூப் லைட்டுகள் எரிவதில்லை.

பெரம்பூர், மைலாப்பூர், அம்பத்தூர், ஒரகடம் உள்ளிட்ட சில பகுதிகளில் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இங்கு உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் மாற்றப்பட்டாலும், மின் சப்ளை சீராக இல்லை. ஏற்றம், இறக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மின்சாரம் பிரச்சினை தொடர்பாக நுகர்வோர்கள் தொடர்பு கொள்ள 155333 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் பெரும்பாலும் `பிஸி'யாக இருக்கும். அல்லது நீண்ட நேரம் மணி அடிக்கும், யாரும் எடுக்க மாட்டார்கள். பொதுமக்கள் எதிர்பார்ப்பதெல்லாம், பகலில் இல்லாவிட்டாலும், இரவு நேரங்களிலாவது, சீரான மின் விநியோகம் செய்யவேண்டும் என்பது தான். மின்சார வாரியம் அதை செய்தால், மக்கள் வாழ்த்துவார்கள்.