Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Saturday, 14 April 2012

ஆண்களுக்கு காதல் இன்று பொழுதுபோக்கே!

* காதலர் தினமென்றால் காதலியுடன் ஜாலியாக பொழுதுபோக்கும் நாள் என்று எண்ணும் ஆண்களும் ஏராளம். `பப்' பார்ட்டிக்குச் சென்று நடனம் ஆடுவதை காதலர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். மேல்தட்டு மக்களின் பழக்கமான `பப்' பார்ட்டி இன்றைய காதலர்களுக்கும் இனிக்கிறது.
 
* ஆண்கள் இப்போது காதலைச் சொல்வதற்கு ரோஜா கொடுப்பதில்லை. எஸ்.எம்.எஸ்.களில் தான் இன்றைய காதல் வளர்கிறது. அத்துடன் தோழிகளிடம் விசாரித்து காதலிக்கு என்ன கலர் பிடிக்கும், என்ன உணவு பிடிக்கும், என்ன கிப்ட் பிடிக்கும் என்பதை தெரிந்து `திடீர் சர்ப்ரைஸ்' கொடுத்து பெண்களை தங்கள் வலையில் விழுவதை நிறைய ஆண்கள் தங்கள் பாணியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 
* ஆண்கள் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டும் காதலிப்பதில்லை என்றும் கல்லூரி மாணவர்கள் சொல்கிறார்கள். இது அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. தன்னைச் சுற்றும் பெண்களில் நாலைந்து பேரை அவர்களும் கணக்கு பண்ணுகிறார்கள். அதில் பெஸ்ட்டாகத் தோன்றும் ஒருவரை நேசிக்கத் தொடங்குகிறார்கள். அவரிடம் வசதிக்குறைவு தெரிந்தால் இரண்டாம் நபரை தேர்வு செய்யும் வகையிலேயே பழக்கத்தில் வைத்திருப்பார்கள். எனவே பெண்கள் காதலரை தேர்வு செய்யும் பொழுது மிகவும் கவனமுடன் இருப்பது தான் அவர்களின் வாழ்விற்கு நல்லது.

No comments:

Post a Comment