மடிக்கணினி வாங்க போகிறீர்களா....உங்களுக்கு சில டிப்ஸ்
1. வாங்குவது என முடிவெடுத்த பின் நாம் முதலில் முடிவு செய்ய வேண்டியது பட்ஜெட். காசுக்கேத்த தோசை என்று ஒரு சொல்வழக்கமுண்டு அது போலத்தான் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கேற்றாற் போல்தான் கணினிகளின் தொழில்நுட்ப பயன்பாடுகளும் அமையும் .
2. பட்ஜெட்டை முடிவு செய்தபின் , உங்களால் அதிகமாக இதற்காக செலவிட இயலும் என்கிற பட்சத்தில் HP,sony அல்லது Dell போன்ற பன்னாட்டு தயாரிப்பாளரின் மடிக்கணினிகளை தேர்வு செய்யலாம் , குறைந்த அளவு பணத்துடன் வாங்க எண்ணுபவர்கள் HCL,Acer,Zenith,Toshiba போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை முயற்ச்சிக்கலாம் . (toshiba மட்டும் வெளிநாட்டு தயாரிப்பு ) . அதற்கு காரணம் தொழில்நுட்பம் , ஒரே தொழில் நுட்ப வசதிகள் இந்திய மற்றும் பன்னாட்டு தயாரிப்பாளர்களிடம் வெவ்வேறு விலைகளில் கிடைப்பதே ஆகும் . ஆனால் ஆடம்பர தொழில்நுட்பங்கள் பன்னாட்டு தயாரிப்புகளில் அதிகம் , அது இந்திய பொருட்களில் குறைவு . அதுதவிர brand image எனப்படுகிற ஒரு விடயமும் இவ்விடயத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று . ஏன்னெனில் இன்று பலரும் மடிகணினியை ஒரு தனிப் பெருமையாக பார்க்கும் நிலை உள்ளது (brand image) .
3.அடுத்து நாம் கவனிக்க வேண்டிய விடயம் , எதற்காக இந்த கணினியை நாம் வாங்கப்போகிறோம் , நாம் எவ்வாறு பயன்படுத்த இருக்கிறோம் என்பதை ஆராயவும் , எப்படி எனில் நீங்கள் பல இடங்களுக்கும் பயணிப்பவர் எனில் எடை குறைந்த உறுதியான , பாதுகாப்பு அம்சங்கள் அதிகமானவையாகவும் , அதிக நேரம் பேட்டரியால் இயங்கக்கூடியதாகவும் வாங்கலாம் . வீடு மற்றும் அலுவலகத்தில் மட்டும் உபயோகிக்க கூடியதாக இருப்பின் மேற்சொன்ன காரணங்களில் எடை தவிர்த்து மற்ற காரணிகளை எடுத்து கொள்ளலாம் . இது தவிர நம் பயன்பாடுகள் மிக முக்கியம் . நாம் இந்த கணினியில் எந்த வகையான பணிகளை செய்ய இருக்கிறோம் , பிற்காலத்தில் என்ன செய்யலாம் என்பதை பற்றியும் , எந்த வகை மென்பொருட்களையும் பயன்படுத்த இருக்கிறோம் என்பதை பற்றியும் அறிந்து கொள்வது நல்லது . ஏனெனில் அதற்கேற்றாற் போல நமக்கு தேவையான configuration ஐ முடிவு செய்யலாம் . தேவையில்லாமல் இணைய பயன்பாட்டிற்கு high configuration கணினியை அதிக செலவில் வாங்க வேண்டியதில்லை .
4. configuration மிக முக்கியமான ஒன்று , நீங்கள் வாங்கும் config. னின் முழு விபரத்தையும் வாங்கி கொள்ளவும் அது கீழுள்ள மாதிரியில் இருப்பது போல பெறவும்
a. processor -(processor type , Processor speed, FSB speed , chipset)
b.RAM or memory-
c.Hard disk drive-
d.Optical disk drive - Preferably a DVD writer
e.Connectivity - (wifi , pcmcia port , bluetooth)
f.Screen Size ( what kind of display and which type) -
g.Weight-
h.Operating systems -
i.additional features-
j.video and audio features -
k.price -
மேற்சொன்ன விடயங்களை பல மாடல்களிலும் பல தயாரிப்புகளிலும் வாங்கி ஆராய்ந்து பிறகு உங்கள் மடிக்கணினியை தேர்ந்தெடுக்கவும் .
4. மேற்சொன்ன விடயங்கள் தவிர கவனிக்க வேண்டிய சில
அ. பல கடைகளுக்கும் சென்று விலை விபரமும் config.ம் விசாரியுங்கள் .
ஆ.தயவு செய்து பழைய மடிக்கணினிகளை வாங்க வேண்டாம்
இ.நீங்கள் வாங்க இருக்கும் கணினியை விற்கும் கடை எப்படி என விசாரித்து வாங்கவும்
ஈ.முக்கியமாக service and support எப்படி என விசாரித்து வாங்கவும்.
உ.விலை , பேரம் பேசி வாங்கவும் .
No comments:
Post a Comment