Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Sunday, 7 July 2013

‘நம்ம ஆட்டோ

‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு





சென்னை : மீட்டருக்கு மேல் ஒரு பைசா கூட அதிகம் வாங்காமல் ஓட்டப்படும் ‘நம்ம ஆட்டோ’க்களுக்கு சென்னை மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
‘நம்ம ஆட்டோ‘ என்ற புதிய பெயரில் சென்னையில் சில ஆட்டோக்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அப்துல் கஜீப், மன்சூர் அலிகான் ஆகிய இருவரும் இணைந்து இத்திட்டத்தை மே மாதம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தினர். 19 ஆட்டோக்களுடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்துக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால் தற்போது நம்ம ஆட்டோ எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

இத்திட்டம் குறித்து அதன் பொது மேலாளர் மூசா சபிகான் கூறியதாவது: நம்ம ஆட்டோக்களில் ஜிபி ஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் ஒவ்வொரு ஆட்டோவையும் தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கிறோம். குறைந்தபட்ச கட்டணமாக (2 கி.மீ. வரை) ஸி25ம், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக ரூ.10ம் வசூலிக்கப்படுகிறது. ஆட்டோவில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. செல்லும் தூரத்தையும் அதற்கான கட்டணத்தையும் பயணிகள் பார்த்துக் கொண்டே செல்லலாம். மீட்டர் காட்டும் கட்டணத்துக்கு மேல் ஒரு பைசா கூட வாங்கக்கூடாது என ஓட்டுனர்களுக்கு கூறப்பட்டுள்ளது. செலுத்தும் கட்டணத்துக்கு தேதி, நேரம், ஆட்டோ நம்பருடன் கூடிய ரசீது தரப்படும்.

 பயணிகளிடம் டிரைவர் தவறாக நடந்தால் அல்லது மரியாதையின்றி பேசினால் அல்லது வேறுவகையான ஆபத்து என்றால் டிஜிட்டல் மீட்டர் அருகில் உள்ள பட்டனை அழுத்தினால் உடனே தலைமை அலுவலகத்தில் பெல் அடிக்கும். ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம் பயணிகள் தங்கள் குறைகளை புகார்களை அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம். மற்ற ஆட்டோக்களை விட கண்டிப்பாக 50 சதவீதம் வரை கட்டணம் குறைவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு மூசா கூறினார்.

நம்ம ஆட்டோ டிரைவர்களுக்கு நிறுவனமே ஆட்டோ வழங்குவதுடன், ஸி18,000 வரை மாத சம்பளம் கொடுக்கிறது. வசூலிலும் கமிஷன் உண்டு. வாரம் ஒருநாள் விடுமுறை. சீருடை இலவசம். மீட்டர் போட வேண்டும், டிப்ஸ் வாங்க கூடாது, மீதி சில்லரை கொடுக்க வேண்டும் என்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு  டிரைவருக்கு ஆட்டோ சொந்தமாக்கப்படும்.

தேனாம்பேட்டை டூ கிண்டி சாதாரண ஆட்டோ ரூ.150 ‘நம்ம ஆட்டோ’வில் ரூ.81

‘நம்ம ஆட்டோ‘வில் நிருபர்கள் வெவ்வேறு இடங்களில் ஏறி பயணம் செய்தனர். தேனாம்பேட்டையில் இருந்து கிண்டிக்கு ‘நம்ம ஆட்டோ‘வில் சென்றபோது 81 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ரசீது கொடுத்தார் டிரைவர். இறங்கிய இடத்தில் இருந்து உடனே தேனாம்பேட்டை திரும்ப சாதாரண ஆட்டோவை அழைத்தபோது, ‘ரூ.180 கொடுங்கள்’ என்று உடனே கேட்டார் அவர். பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.150க்கு சம்மதித்தார். அதேபோன்று தேனாம்பேட்டையில் இருந்து கோயம்பேடுக்கு சாதாரண ஆட்டோவில் ரூ.250 வசூலிக்கப்பட்டது. நம்ம ஆட்டோவில் தேனாம்பேட்டையில் இருந்து கோயம்பேடுக்கும், பின்னர் அங்கிருந்து தேனாம்பேட்டைக்கு திரும்பி வரவும் மொத்தமே ரூ.220 கட்டணம் வந்தது. நம்ம ஆட்டோ டிரைவர்கள் மிதமான வேகத்தில் செல்வதும் பயணிகளை கவர்ந்துள்ளது
.

No comments:

Post a Comment