கண்ணிருந்தும் குருடர்கள் காதிருந்தும் செவிடர்கள்.

ஒருவரை கொலை செய்தால் மரண தண்டனை. அப்படி என்றால் 10 ஆயிரம் பேர் சாவுக்கு காரணமானவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பயங்கர மழை வரும், வெள்ளம் வரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தும் அதை உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளர் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவுதான் பார்க்கும் இடத்தில் எல்லாம் பிணங்கள்.
அலட்சியம் அரசு அதிகாரிகளின் உடன் பிறந்த குணம். அதனால் அப்பாவிகள் படும் கஷ்டத்தை பற்றி துளிக் கூட கவலைப்பட மாட்டார்கள். அடுத்த 72 மணி நேரத்துக்கு மிக அதிக அளவு மழை பெய்யும் என்றும் யாத்ரீகர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது நல்லது என்றும் மாநில வானிலை மையம் ஜூன் 15ம் தேதி எச்சரிக்கை விடுத்தது. மறுநாளும் அடுத்த கன மழை பெய்யும் என்றும் யாத்திரையை 4 நாட்கள் தள்ளிப்போடலாம் என்றும் கூறியது.
இதை மாநில அரசு கேட்டிருந்தால் பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் எச்சரிக்கை விடுப்பது வானிலை மையத்துக்கு வழக்கம் என அலட்சியமாக கூறியிருக்கிறார் தலைமை செயலாளர் சுபாஷ் குமார். ஆனால் மிக அதிக அளவு மழை, கன மழை போன்ற எச்சரிக்கையை எப்போதாவதுதான் சொல்வோம். இதை வழக்கமான வானிலை அறிக்கை என எப்படி அலட்சியப்படுத்தலாம் என்கிறார் வானிலை மைய இயக்குநர்.
வெள்ளத்தில் சிக்கி சீரழிந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் கூறும் கதைகள் கண்ணீரை வரவழைக்கிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள், இடிந்த கட்டிடங்களில் புதைந்தவர்கள், குடும்பத்தோடு பலியானவர்கள் என அவர்கள் செல்போனில் எடுத்த படங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அமெரிக்காவில் சூறாவளி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் நடக்கும்போது, அழிவு அதிகமாக இருக்கும். ஆனால் உயிர் பலி மிகவும் குறைவாக இருக்கும்.
காரணம், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள். இங்கு அது பூஜ்யம். அதனால்தான் ஒவ்வொரு முறையும் கொத்துக் கொத்தாக மக்கள் மடிகிறார்கள். தவறுக்கு காரணமான அதிகாரிகளுக்கு அதிகம் போனால் பணியிட மாற்றம், இடைநீக்க தண்டனைதான் தரப்படுகிறது. இது போதாது. ஆயிரக் கணக்கானோர் மடியக் காரணமான இதுவும் போர்க் குற்றம் போன்றதுதான். விசாரணை நடத்தி தூக்குத் தண்டனை கூட கொடுக்கலாம்.

No comments:
Post a Comment