Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Tuesday, 18 September 2012

லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனத்தினால் இருதயப் பிரச்சனைகள்!
 
 
 
லிப்ஸ்டிக்குகள் மற்றும் நாம் கைகழுவப் பயன்படுத்தும் திரவப்பொருட்களில் சிலவற்றில் உள்ள ரசாயனத்தின் தன்மை இருதயப்பிரச்சனைகளை தோற்றுவிப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் இது பற்றிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளோசன் (triclosan) என்ற ரசாயனம் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களில் அனைத்திலும் உள்ளது. இந்த ரசாயனம் இருதயம் உட்பட மூளையிலிருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக இந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எலிகளில் டிரைக்ளோசனைப் பயன்படுத்தி சோதனைகள் மேற்கொண்ட போது 20 நிமிடத்திலேயே எலிகளில் இருதயச் செயல்பாடுகள் படிபடிப்படியாக குறைந்ததை இவர்கள் கண்டனர்.

இதுவே மனித உடல்களிலும் நடக்கலாம் என்று இவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனாலும் எலிகளில் பரிசோதனைக்காக ஏற்றப்பட்ட டிரைக்ளோசன் அளவுகள் அதிகம், ஆனால் லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் உள்ள இந்த ரசாயனத்தின் அளவு மிகக்குறைவே என்று இந்தப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஏற்க மறுத்தனர்.

டிரைக்ளோசன் பற்றி ஏதோ இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னதாக இந்த ரசாயனத்திற்கும் தைராய்டு பிரச்சனை மற்றும் மலட்டுத் தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

தசைகளில் இதன் தாக்க்ம் பற்றி இப்போதுதான் ஆராய்ப்படுகிறது.

மருதுதுவ மனைகளில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பாக்டீரியா நுண்ணுயிரித் தாக்கத்தை இது தடுப்ப்தாகவே டாக்டர்கள் கருதுகின்றனர்.

ஆனால் கலிபோர்னியா விஞ்ஞானிகளோ இந்த ரசாயனத்தின் தாக்க்ம் உடல் உறுப்புகளிலும் விளைவை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

டிரைக்ளோசன் அனைத்திலும் உள்ளது, சுற்றுப்புறச் சூழலில் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கே நன்மை பயப்பதல்ல என்று கூறுகின்றனர்.

நல்ல இருதய ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு இந்த ரசாயனத்தினால் 10% இருதயச் செயல்பாடு குறைந்தால் தெரியாது. ஆனால் இருதயப்பிரச்சனைகள் ஏற்கனவே உள்ளவர்களுக்கு 10% செயல்பாட்டுக் குறைவு என்பது ஆபத்தல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பரிசோதனையில் எலிகளுக்கு டிரைக்ளோசன் ஏற்றிய 20வது நிமிடத்தில் அதன் இருதய செயல்பாட்டில் குறிப்பிடத்தகுந்த இடரபாடுகள் தெரிந்தது.

ஆகவே பெண்களே உஷார்! லிப்ஸ்டிக் போட்டால்தான் அழகு கூடுகிறது என்பது முதலில் ஒரு மாயை

Sunday, 9 September 2012

DID YOU EVER SEEN SUCH A PICTURE?..WHAT YOU LEARN FROM THE CREW....?

திபெத், இமாலயப் பனிமலைகள் அதிவேகமாக உருகி வருகின்றன!
 
 
 
திபெத் பீடபூமியில் உள்ள பெரும்பாலான பனிமலைகளில் பனி அதிவேகமாக உருகி வருவதாக கடந்த 30 ஆண்டுகால ஆய்வுகளை மேற்கொண்ட சீன ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு ஆய்வு தெரிவித்தது போல் திபெத் பனிமலைகள் வளர்ந்து வருகின்றன என்பது முற்றிலும் தவறு என்று தற்போது தெரியவந்துள்ளதாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சீன பனி மலை ஆய்வாளர்களின் இந்த ஆய்வு பற்றிய விவரங்கள் விஞ்ஞான இதழான நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்பதில் விரிவாக வெளியாகியுள்ளது.

திபெத் பீடபூமி என்பதிலிருந்து உருவாகும் மலைத்தொடர்கள்தான் இமாலயம், காரகோரம், பாமீர், மற்றும் கிலியன் ஆகியவையாகும். இவை அனைத்தும் சேர்ந்து ஒரு லட்சம் சதுர கில்மோமீட்டர் பரப்புடையது. இந்தப் பனிமலைகளின் மூலம் ஆசியாவில் உள்ள 1.4 பில்லியன் மக்கள் தொகைக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.

இங்கிருந்துதான் கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதி, மேகாங், யாங்சீ போன்ற மிகப்பெரிய நதிகள் பூமியை நனைக்கின்றன. மிகப்பெரிய அளவில் புதிதான நீரை வழங்கி வரும் இதனை 'பூமியின் 3வது துருவம்' என்றே விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

தற்போது உலகவெப்பமயமாதலினால் இந்த பனிப்பிரதேசங்களுக்கு ஆபத்து விளைந்துள்ளது.

சீன ஆய்வாளர்கள் சுமார் 7,100 பனிச்சிகரங்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக முக்கியமான 15 பனிமலைகளை நேரடியாக ஆய்வு செய்தனர். இதில் கண்ட உண்மை என்னவெனில் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பனிச்சிகரங்களில் பனி வற்றி வருகிறது.

பனி உருகுகிறது ஆனால் புதிய பனிப்படலங்கள் உருவாவதில்லை. இதனால் பனி வற்றிய மலைகளாக இவை ஆகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக இந்த பனிமலைத் தொடர்களில் காரகோரம் உள்ளிட்ட மற்ற சிகரங்களை விட இமயமலைப் பனிப்பாறைகள் விரைவில் பனியற்றதாகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏன் இமாலயத்தில் மட்டும் அதிவேகமாக பனி வற்றிப்போகிறது என்றால் காற்றுதான் காரணம் என்று கூறுகின்றனர்.

இந்திய பருவநிலைகள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக மாறிவருவதால் அதனை நம்பியிருக்கும் இமாலயப் பனிமலைகள் உருகுவதும் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆவ்ய்கள் மேலும் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிடவுள்ளன.
 
“பூமியை தாக்கிய டைனோசர்களின் குசு”
 
 
 
 
பிரம்மாண்ட டைனோசர்களின் குசு(மலக்காற்று) ஒரு காலத்தில் பூமியை பெரும் அளவில் வெப்பமைடைய செய்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டிஷ் அறிவியலாளரான டேவிட் வில்கின்சன் மற்றும் அவரது நண்பர்கள் இதுக்குறித்த ஆய்வறிக்கையை கரண்ட் பையாலஜி என்ற இதழில் வெளியிட்டுள்ளனர்.

மிகப்பெரிய டைனோசர்கள் வாழ்ந்த சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி அதிக வெப்பமடைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு டைனோசர்களின் குசு கூட காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

அறிவியலாளர்கள், டைனோசர்கள் வெளியிடும் குசு தன்மை எவ்வளவு என்பதை ஆய்வு செய்தனர்.

அப்போது வாழ்ந்த மொத்த டைனோசர்களிடமிருந்து ஆண்டுக்கு 520 மில்லியன் டன் வாயு உற்பத்தியாகியதாம்.

இதில் மீதேன் வாயு அடங்கி உள்ளதாம்.

பொதுவாக ‘கிரீஹவுஸ் கேஸ்’ எனப்படும் மீதேன் வாயு சூரியனிடமிருந்து அகச்சிவப்பு கதிர்வீச்சை உள்வாங்கும் தன்மை உடையது.

இதனால், பூமியில் வெப்பம் அதிகரிக்கும்.

சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாக இருந்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், உயிரினங்களின் மீதேன் உற்பத்தியால் அத்தகைய புவியின் சுழ்நிலையை எவ்வாறு பாதித்துள்ளன என்பதை ஆய்வு பொருளாக வைத்து அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.

இதற்காக டைனோசரை எடுத்துக்கொண்ட அவர்கள் இந்த அதிர்ச்சி தகவலை நமக்கு கூறுகின்றனர்.

தற்போது, மீதேன் உற்பத்தியானது, வெவ்வேறு இயற்கை பொருட்களிடமிருந்து 500 மில்லியன் டன் ஆண்டொன்றிற்கு கிடைக்கிறதாம்.

ஆனால், வெறும் டைனோசர்கள் மட்டுமே 520மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளன. மேலும், டைனோசர் மட்டுமல்லாமல், மற்ற பொருட்கள் மூலமும் மீதேன் உற்பத்தி நடந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் பாருங்கள்... தற்போதுள்ள வெப்ப அளவை விட சுமார் 150, 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு வெப்பம் இருந்திருக்கும் என்று...
இப்படியும் சில மோசடிகள்

இந்த அனுபவம் எங்களது உறவினருக்கு நேரிட்ட அனுபவம். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது அம்மாவின் அக்காள், தனது கணவருடன் பல்லாவரத்தில் வசித்து வருகிறார். இருவருக்குமே நீரிழிவு நோய் என்பதால் அவ்வப்போது சென்னை பொது மருத்துவமனைக்கு வந்து நீரிழிவு மாத்திரைகளை வாங்கிச் செல்வார் என் பெரியப்பா. அவரது மூத்த மகள் சென்னை களங்கர¨ விளக்கம் அருகில் வசித்து வருகிறார்.

இது முன் கதை சுருக்கம்.

நிகழ்வு - ஒரு நாள் காலை வேளையில் என் அக்கா வீட்டின் அருகே ஒரு வயதானவர் நின்று கொண்டு இங்கு என் அக்காவின் பெயரையும், மாமாவின் பெயரையும் சொல்லி அவர்களது வீடு எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ஒருவர் என் அக்காவின் வீட்டைக் காண்பித்து அனுப்பி வைத்துள்ளார். அவர் என் அக்காவிடம் வந்து உங்களது தந்தை மருத்துவமன(பெயரை‌ச் சொ‌ல்‌லி) வழியில் விபத்தில் சிக்கிக் கொண்டார். உடனடியாக அவரை நான்தான் மருத்துவமனையில் சேர்த்தேன். உங்கள் முகவரி கொடுத்து உடனடியாக ரூ.500 பெற்று வரச் சொன்னார். ரத்தம் செலுத்த பணம் கேட்டு மருத்துவமனையில் அவசரப்படுத்தியதால் ஆட்டோவில் வந்தேன். அதற்குத் தனியாக 200 கேட்டார்.

அவசரத்தில் எதுவும் புரியாத என் அக்காவோ, முதலில் காசைக் கொடுத்துள்ளார்.

அவசரக் கோலத்தில் கிளம்பி அவருடன் வெளியே செல்ல, அவரோ வந்த ஆட்டோவில் வேகமாகக் கிளம்பி போய்விட்டார். அவரைக் காணாது திகைத்த என் அக்கா, உடனடியாக அம்மா வீட்டிற்கு போன் செய்து பேசியதில், அன்று மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அப்பா ஏதோ ஒரு காரணத்தால் போகாமல் வீட்டிலேயே இருந்தது தெரிய வந்தது.

அதன் பிறகு அக்கா ஒரு பெரிய ஏமாற்றத்துடன், நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

இது எப்படி நிகழ்ந்திருக்கும் என்று நான் யோசிக்கிறேன் என்றால், மருத்துவமனைக்கு வரும் என் பெரியப்பா அவரது சொந்தக் கதையை தன்னுடன் மருத்துவமனைக்கு வரும் யாராவது ஒருவரிடம் கூறியிருப்பார். அவர் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்திவிட்டார்.

எனவே, பு‌திதாக ச‌ந்‌தி‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் நமது உறவு முறைகளையு‌ம், பெய‌ர்களையு‌ம், ‌விலாச‌த்தை‌யு‌ம் கூற வே‌ண்டா‌ம். எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

Thursday, 30 August 2012

அவசர‌த் ‌திருமண‌ம் அவ‌ஸ்தையாகலா‌ம்
 
பொதுவாக காத‌ல் ‌திருமண‌ங்க‌ள்தா‌ன் அ‌திகமாக ‌பி‌ரி‌வினை ச‌ந்‌தி‌க்‌கி‌ன்றன. இத‌ற்கு அடி‌ப்படை‌க் காரண‌‌த்‌தி‌ல் அவசர‌க் க‌ல்யாண‌ம் முத‌லி‌ல் ‌நி‌‌ற்‌கிறது.

காதலை‌ச் சொ‌ல்‌லி, ஒருவரை ஒருவ‌ர் பு‌ரி‌ந்து கொ‌ண்டு, ‌த‌ங்களது வரு‌ங்கால‌த்தை‌ப் ப‌ற்‌றி ச‌ரியாக ‌தி‌ட்ட‌மி‌ட்டு, ‌வீ‌ட்டி‌ல் பெ‌ரியவ‌ர்க‌ளி‌ன் அனும‌தியோடு நட‌க்கு‌ம் ‌திருமண‌ங்களை ‌விட, அவசர அவசரமாக த‌ங்களது ‌திருமண‌ங்களை நட‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் காதல‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தை ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்பதுதா‌ன் ‌நித‌ர்சனமான உ‌ண்மை.

காதல‌ர்க‌ள் த‌ங்களது காதலை‌ச் சொ‌ல்ல வே‌ண்டுமானா‌ல் அவசர‌ம் கா‌ட்டலா‌ம். அ‌தி‌ல் தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ள்ள அவசர‌ப்படவே‌க் கூடாது. ‌நிதானமாக த‌ங்களது ‌நிலைகளை ஒருவரு‌க்கொருவ‌ர் பு‌ரிய வை‌‌க்க வே‌ண்டு‌ம். த‌ங்களது வரு‌ங்கால‌த்தை‌ப் ப‌ற்‌றி‌த் தெ‌ளிவாக பே‌சி ஒரு‌‌‌மி‌த்த‌க் கரு‌த்தை கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம்.

வீ‌ட்டி‌ல் பெ‌ரியவ‌ர்க‌‌ளிட‌ம் உ‌ங்களது காதலை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்‌லி அவ‌ர்க‌ளிட‌ம் அனும‌தி பெற முய‌ற்‌சி‌க்க வே‌ண்டு‌ம். ‌சில கால‌ம் பொறு‌த்‌திரு‌ந்து அவ‌ர்களது மன‌தி‌ல் இட‌ம்‌பிடி‌க்கவு‌ம், உ‌ங்களது காத‌ல் ‌மீதான உறு‌தியை கா‌ட்டவு‌ம் அவகாச‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

பிறகு‌ம் அவ‌ர்களது எ‌தி‌ர்‌ப்பு அ‌திக‌ரி‌த்தா‌ல், அ‌ப்போது ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியேறுவதோ, சுயமாக ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வதோ தவ‌றி‌ல்லை.

ஆனா‌ல், ‌வீ‌‌ட்டி‌ல் ‌ஏதாவது ஒரு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் பொழுது அ‌தி‌லிரு‌ந்து த‌ப்‌பி‌ப்பத‌ற்காக ச‌ரியான ‌தி‌ட்ட‌மிட‌ல் இ‌ல்லாம‌ல் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு ஓடி‌ப்போ‌ய் ‌திருமண‌ம் முடி‌த்து‌க் கொ‌ள்வது தவறான முடிவாகு‌ம்.

இதனா‌ல் காதல‌ர்க‌ள் இருவருமே வேலை வா‌ய்‌ப்பு, க‌ல்‌வி போ‌ன்றவ‌ற்றை ‌தி‌ட்‌ட‌மி‌ட்டபடி அடைய முடியாம‌ல் ‌கிடை‌த்ததை‌க் கொ‌ண்டு வாழ வே‌ண்டிய சூழலு‌க்கு‌த் த‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

ஓரள‌வி‌ற்கு வச‌தியான குடு‌ம்ப‌த்‌தி‌ல் இரு‌ந்து வ‌ந்த ஆணோ, பெ‌ண்ணோ, ‌திடீரென த‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் கஷ‌்ட‌ங்களை ‌திருமணமான பு‌தி‌தி‌ல் வே‌ண்டுமானா‌ல் தா‌க்கு‌ப்‌பிடி‌க்க‌ப் பா‌ர்‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல் அதையே வா‌ழ்நா‌ள் முழுவது‌ம் ச‌கி‌த்து‌க் கொ‌ள்ள முடியாதவ‌ர்களாக ஒரு கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்தையே வெறு‌ப்பா‌ர்க‌ள். அடு‌த்ததாக தா‌ம் ‌விரு‌ம்‌பி ஏ‌ற்று‌க் கொ‌ண்ட தனது வா‌ழ்‌க்கை‌த் து‌ணை‌யி‌ன் ‌‌மீது த‌ங்களது கோப‌ம் ‌திரு‌ம்பு‌ம்.

மேலு‌ம், அவசர‌க் க‌ல்யாணத‌்‌தினா‌ல் இருவருமே த‌ங்களது பெ‌ற்றோ‌ர், உற‌வின‌ர்க‌‌ளி‌ன் ஆதர‌வினை இழ‌க்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனா‌ல் மன‌விய‌ல் அடி‌ப்படை‌யிலு‌ம் த‌ங்களு‌க்கு யாரு‌மி‌ல்லை எ‌ன்ற பய‌த்தை ஏ‌ற்படு‌த்த‌ி‌யிரு‌க்கு‌ம்.

ஒருவேளை இருவரு‌ம் ந‌ல்ல முறை‌யி‌ல் காத‌லி‌த்து ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் சுக து‌க்க‌ங்களை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வா‌ய்‌ப்பு ஏ‌ற்படு‌ம். ஆனா‌ல் ஒருவ‌ர், வெறு‌ம் காம‌த்‌தி‌ற்காகவோ, பண‌ம் அ‌ல்லது வேறு ஒரு தேவை‌க்காக ஏமா‌ற்‌றி ‌திருமண‌ம் செ‌‌ய்து கொ‌ள்ளு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல், அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் அ‌ல்லது ஆ‌ணி‌ன் ‌நிலை எ‌ன்னவாக இரு‌க்கு‌ம். ந‌ம்‌பி வ‌ந்த இடமு‌ம் மோச‌ம் போ‌ய், பெ‌ற்றவ‌ர்களு‌ம் ந‌ம்மை ‌மீ‌ண்டு‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளாத ‌நிலை‌யி‌ல் அனாதை ‌நிலை‌க்கு அ‌ல்லவா த‌ள்ள‌ப்படுவா‌ர்க‌ள்.

எனவே, யாராக இரு‌ந்தாலு‌ம், காதலை ந‌ல்ல முறை‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்ல தெ‌ளிவான ‌சி‌ந்தனையு‌ம், முடிவு‌ம் அவ‌சிய‌ம். அவசர‌த் ‌திருமண‌ம் அவ‌ஸ்தை‌யி‌ல் முடியலா‌ம். எ‌ச்ச‌ரி‌க்கை உண‌‌ர்வோடு செய‌ல்படு‌ங்க‌ள். 
ஆடம்பரக் காதல்  
 
 
காதல் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துக்காகவே சிலர் காதலல் விழுவதுண்டு. பணம், செல்வாக்கு, ஆள் வலிமை உள்ள ஆண்கள் காதலில் தங்கள் பலத்தினை காட்டவேண்டும் என்பதற்காக, யாராவது ஒரு பெண் மீது குறி வைத்து காதல் காட்டுவார்கள்.

அந்தக் காதலை ஜெயிப்பதற்காக பணம், பலம் அனைத்தையும் காட்டுவார்கள். திருமணம் என்ற சூழல் ஏற்படும்போது மிக நல்ல பிள்ளையாக மாறி, "அம்மா, அப்பா சொல்படிதான் நடப்பேன்" என்பார்கள். ஏனென்றால் இவர்களது பெற்றோரின் சொத்து அவசியம் தேவை என்பதுதான் உண்மை.

இதேபோல் சில பெண்களும் தங்கள் இளமை மற்றும் அழகினை மற்றவர் முன் பறைசாற்றுவதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் மிகவும் அந்நியோன்யமாக பழகுவார்கள். அவர்களுக்கு என்று ஒரு எல்லை வைத்துக்கொண்டு, அதற்குப் பின் அந்தக் காதலர்களை அவமரியாதை செய்து அனுப்பிவிடுவார்கள்.

அதாவது இப்படிப்பட்டவர்கள் காதல் என்பதை ஒரு பொழுதுபோக்காக ஜாலியாக எடுப்பவர்கள். இப்படிப்பட்டவர்களிடம் சிக்கி ஏமாந்து போகும் ஆண், பெண்தான் ஏமாற்றம் தாங்க முடியாமல் தற்கொலை என்ற மோசமான முடிவினை எடுப்பதுண்டு.

இப்படிப்பட்ட காதலைக் கண்டுகொள்வதும், விலக்குவதும் மிக எளிது. அதாவது ஆரம்பமே மிக அவசரமாக இருக்கும்.

"காதலிக்கிறேன்" என்ற ஒரு வார்த்தையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சகஜமாகப் பேசுவார்கள். எல்லா முடிவுகளும் அவர்கள் எடுப்பதாகவே இருக்கும். நாளை ஒரு இடத்திற்குப் போகலாம் என முடிவெடுத்தால் எங்கே போவது, என்ன செய்வது, எப்பொழுது திரும்புவது என எல்லாவற்றையும் அவர்களே முடிவெடுப்பார்கள்.

இந்த வகையான ஆண், பெண் இருவரும் திருமணம் பற்றி பேசமாட்டார்கள். நம்பு என்று சந்திப்பார்கள். இவர்களை நல்ல காதலர்களாக மாற்றுவது என்பது நாய் வாலை நிமிர்த்துவது போன்று கடினமானது.

எனவே, இப்படிப்பட்ட நபர்கள் என்று அறியவரும் பொழுது இது காதல் இல்லை என்று தெளிவடைவது நல்லது. மேலும், அவர்களுடன் நட்பினை தொடர்வதும் ஆபத்தானதே. ஏதாவது ஒரு கடினமான இக்கட்டான சூழலில் யாராவது ஒருவருடன் வாழ முடிவெடுத்துவிடுவார்கள். அவர்களுடன் கடைசி வரை ஓர் அடிமை நிலையில் வாழ வேண்டுமே தவிர அந்நியோன்யமாக வாழ முடியாது.


50 பேரை மண‌ந்த கேரள சாகசகா‌ரி!
ா.


நாகரீகங்கள் வளர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் மனிதன் காமத்துக்கு பலி ஆகின்ற நிலையை பார்க்கும்போது நாம் இன்னும் கற்காலத்தில் தான் இருக்கின்றோமா என்ற சந்தேகம் எழுகின்றது.  இரண்டு வருடங்களுக்கு முன்னர் காவல் துறையை ஆட்டி படைத்த ஜெயா என்ற பெண்ணின் வரவுக்கு பிறகு தற்சமயம் சஹானா என்ற கேரளா பெண்ணின் சாகசத்திற்கு நம்மூர் ராமன்கள் பலி ஆகி இருப்பதை  பார்த்தால் என் சந்தேகம் நியாயம்தான்.  மேலே படியுங்கள்.....


''பண‌மஎ‌ன்றா‌ல் ‌பிணமு‌மவாயை ‌பிள‌க்கு‌ம்'' எ‌ன்பழமொ‌ழி‌க்கஏ‌ற்ப, பெ‌ணஎ‌ன்றா‌லஆ‌ண்களு‌ம் 'ஜொ‌‌ல் வடி‌ப்பா‌ர்க‌ள்' எ‌ன்பதபோஎ‌ன்‌‌ஜீ‌னிய‌ர், கா‌ல்ப‌ந்து ‌வீர‌ரன 50 பேரை ‌திருமண‌மசெ‌ய்தஏமா‌ற்‌றி இரு‌க்‌கிறா‌ரகேரளாவசே‌ர்‌ந்அழ‌கி. நகை, பண‌‌த்தசுரு‌ட்டிகேரளஅழ‌கியத‌ற்போதகாவ‌ல்துறதேடி வரு‌கிறது.

சென்னை முகலிவாக்க‌‌த்தசே‌ர்‌ந்தவ‌ரம‌ணிக‌ண்ட‌ன். டிப்ளமோ என்ஜினீயரிங் படி‌த்து‌வி‌ட்டமாருதி கார் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறா‌ர். ‌ம‌ணிக‌‌ண்ட‌‌னி‌னசெ‌‌ல்போனஅவ‌ரு‌க்கஏமனாமா‌றி‌வி‌ட்டது. முத‌னமுத‌லி‌லசெல்போன் மூலம் அ‌றிமுக‌‌‌மா‌கி உ‌ள்ளா‌ரகேரளாவசே‌ர்‌ந்சகானா. அவரதமுத‌லபே‌ச்சே, ''உ‌ங்க‌ளகுரல் பிடித்திருக்கிறது. அதனால் உங்களையும் பிடித்திருக்கிறது'' என்று ம‌ணிக‌ண்டனதனது ‌கிளு‌கிளபே‌ச்சா‌லக‌வி‌ழ்‌த்து ‌வி‌ட்டா‌ரசகானா. செ‌ல்போ‌‌னி‌ல் ‌சிநா‌ட்க‌ளபே‌சி‌ககொ‌ண்இருவரு‌மஒருநா‌ளநே‌ரி‌லச‌ந்‌தி‌த்தன‌ர். சகானஅழ‌கி‌லமய‌ங்‌கிம‌ணிக‌ண்ட‌‌னிட‌ம், தா‌னவக்கீலுக்கு படித்துள்ளதாகவும், சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌லவக்கீல் தொழில் செய்வதாகவும், அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதப்போவதாகவு‌மகூ‌றி ம‌ணிக‌ண்டனமய‌‌க்கி‌வி‌ட்டா‌ர்.

சகானா‌வி‌னஇ‌ந்பே‌ச்சந‌ம்‌பிம‌ணிக‌ண்ட‌ன், பெ‌ற்றோரு‌க்கதெ‌ரியாம‌லஅவரரக‌சிய ‌திருமண‌மு‌மசெ‌ய்து ‌கொ‌ண்டா‌ர். நாளடை‌வி‌லபெற்றோரு‌க்கத‌ெ‌ரியவ‌ந்தது. மக‌‌னி‌னஆசை‌க்கமறு‌ப்பதெ‌ரி‌வி‌க்காபெ‌ற்றோ‌ரம‌ணிக‌ண்ட‌ன் - சகானாவு‌க்கு ‌திருமண‌மசெ‌ய்தவை‌த்தன‌ர். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, காலில் மெட்டி அணிவித்து, இப்படி அத்தனை திருமண சடங்குகளையும் செய்து சகானாவகைப்பிடித்தா‌ரம‌ணிக‌ண்ட‌ன்.

திருமண‌த்து‌க்கு ‌பிறகம‌ணிக‌ண்ட‌னி‌ட‌ம், தனதசொந்த ஊர் கேரளா என்றும் பெற்றோர் இறந்து விட்டதால் தான் ஒரு அனாதை என்றும் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ரசகானா. இதை நம்பிம‌ணிக‌ண்ட‌ன், சகானாவுட‌னகுடு‌ம்ப‌‌மநட‌த்‌தினா‌ர். 2 மாகுடு‌‌‌ம்வா‌ழ்‌க்கசகானாவு‌க்கபு‌ளி‌த்து‌வி‌ட்டது. ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டி இருப்பதால், படிக்க தனிமை தேவை‌ப்படு‌கிறதஎன்று கூ‌றி, செ‌ன்னசைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதி‌யி‌லதங்கி படி‌‌க்‌கிறே‌னஎ‌ன்றசகானகூ‌றியதந‌ம்‌‌‌பிமணிக‌ண்ட‌னஅவரை ‌விடு‌தி‌யி‌லசே‌ர்‌‌த்‌தா‌ர்.

தின‌ந்தோறு‌மமனை‌வி சகானாவபா‌ர்‌‌த்து‌வி‌ட்டுதா‌ன் ‌வீ‌ட்டி‌ற்கசெ‌ல்வா‌ரம‌ணிக‌ண்ட‌ன். கடந்த ஜனவரி‌யி‌லமனை‌வியபா‌ர்‌க்செ‌ன்ம‌‌ணிக‌ண்டனு‌க்கஅ‌தி‌ர்‌ச்‌சி. விடுதியை காலி செய்துவிட்டு மாயமானா‌ரசகானா. அதன்பிறகு ஒரநா‌ளோ‌னி‌லம‌ணிக‌ண்டனதொட‌ர்பகொ‌ண்சகானா, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத செ‌ன்று‌வி‌ட்டதாகூ‌றி‌யதோடச‌ரி அத‌ன் ‌பிறகு, ப‌த்‌தி‌ரிகசெ‌ய்‌தியபா‌ர்‌த்ததா‌னதெ‌ரி‌ந்தகொ‌ண்டா‌ரம‌ணிக‌ண்ட‌ன். சகானாவா‌லஇழந்தது பல லட்ச‌ங்க‌ளஎ‌ன்றவேதனையுட‌னசெ‌ன்னபோ‌லீ‌‌ஸக‌மிஷன‌ரஅலுவலக‌த்‌திற‌்கபுகா‌ரகொடு‌க்வ‌ந்து‌ள்ளா‌ர்.

சகானா‌ வலை‌யி‌லஅடு‌த்து ‌விழு‌ந்தவ‌ரசெ‌ன்னையச‌ே‌ர்‌ந்கா‌ல்ப‌ந்து ‌வீர‌ர் ‌பிர‌ச‌ன்னா. டிப்ளமோ என்ஜினீயரான ‌பிர‌ச‌ன்னா, செ‌ன்னபுளியந்தோப்பில் வசி‌த்தவரு‌கிறா‌ர். சகானாவை முத‌னமுறையாபுரசைவாக்கத்தில் உ‌ள்ஒரு கடையில் சந்தித்து‌ள்ளா‌ர். முத‌லச‌ந்‌தி‌ப்‌பிலேயே ‌பிரச‌ன்னாவை ‌தனதமாயவலை‌யி‌லவீ‌ழ்‌த்‌தினா‌ரசகானா.

கடந்த மார்ச் 5ஆ‌ம் தேதி காஞ்‌சிபுரம் மாவ‌ட்ட‌ம், ஊத்துக்காடு எல்லை அம்மன் கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் ‌பிரச‌ன்னா - சகானா ‌திருமண‌‌ம் நட‌ந்தது. இர‌ண்டு மாத‌ங்க‌ள் குடி‌த்தன‌ம் செ‌ய்து‌வி‌ட்டு வக்கீலுக்கு படிக்க‌ப்போ‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றி‌‌வி‌ட்டு செ‌ன்ற சகானா, போ‌னி‌ல்தா‌ன் ‌பிரச‌ன்னாவுட‌ன் பே‌‌சி வ‌ந்து‌ள்ளா‌ர். ப‌த்‌தி‌ரிகை செ‌ய்‌தியை பா‌ர்‌த்து த‌ற்போது அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ல் உ‌ள்ளா‌ர் ‌பிரச‌ன்னா.

ஒரு நாள் ‌பிர‌ச‌ன்னா‌வி‌ன் தாயாருடன் சகானா, புளியந்தோப்பு மார்க்கெட்டுக்கு சென்‌றிரு‌க்‌‌கிறா‌ர். அ‌ப்போது ப‌க்க‌த்து தெருவை சே‌ர்‌ந்த சுரே‌ஷ் எ‌ன்பவ‌ரி‌ன் தாயா‌ர், வேறொரு பெ‌ண்ணுட‌ன் சகானா வருவதை பார்த்து, அவள் எனது மருமகள் என்று கூறி இருக்கிறா‌ர். ஆனா‌ல் ‌பிர‌ச‌ன்னா தாயாரோ, நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள், சகானா எனது மருமகள் என்று கூறியு‌ள்ளா‌ர்.

சி‌க்‌கி‌க் கொ‌ண்ட சகானா, சுரே‌ஷின் தாயாரை மிரட்டியதோடு, பிரசன்னாவின் மனைவிதான் நா‌ன் என்று கூறிவிட்டு செ‌ன்று‌வி‌ட்டா‌ர் சகானா. அதிர்ச்சி அடைந்த சுரேஷ் தாயா‌ர், நட‌ந்ததை தனது மக‌‌னி‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர். இதனா‌ல் ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த சுரே‌ஷ், புளியந்தோப்பு போலீசில் புகார் செ‌ய்தா‌ர். ‌பிர‌ச‌ன்னா தயா‌ர், சுரே‌‌ஷ், அவரது தாயா‌ர், சகானா ஆ‌கியோரை காவ‌ல் ‌நிலைய‌த்து‌க்கு அழை‌த்தது போ‌‌‌லீ‌ஸ். அ‌ப்போது, நா‌ன் சொ‌ல்வதெ‌ல்லா‌ம் உ‌ண்மை. உ‌ண்மையை‌த்த‌விர வேறொ‌ன்று‌ம் இ‌ல்லை எ‌ன்று கூறுவது போ‌ல், பிரசன்னாதான் எனது கணவர் என்று சத்தியம் செய்து‌ள்ளா‌ர் சகானா. த‌ற்போது சகானாவா‌ல் ரூ.5 லட்சத்தை இழந்து த‌வி‌க்‌கிறா‌ர் ‌பிர‌ச‌ன்னா.

இ‌ப்படி பல வா‌லிப‌ர்களை த‌ன்னுடைய காம‌ப்பா‌ர்வையாலு‌ம், வ‌சிக‌‌ரத்தாலு‌ம் ‌விழவை‌த்த சகானா, ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டவ‌ர்க‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 50 பே‌ர். சாகசகா‌ரி சகானா ‌மீது வேப்பேரி, அடையாறு, திருவொற்றியூர், புளியந்தோப்பு என பல போலீஸ் நிலையங்களிலும் அவரா‌ல் ஏமா‌ற்ற‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் புகா‌ர் கொடு‌த்து‌ள்ளன‌ர். அதோடு மத்திய குற்றப்பிரிவு போலீசிலும், சகானா‌வி‌ல் ஏமாந்த கணவ‌ன்க‌ள் 15 பேர் புகார் அ‌ளி‌த்து‌ள்ளன‌ர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், அடையாரை சேர்ந்த சரவணன், சீனிவாசன், தியாகராயநகரைச் சேர்ந்த ராஜா, சம்சுதீன், திருவள்ளூர் ராஜேஷ், கோவை சரவணன், திருச்சி ராகுல், அம்பத்தூர் சந்திரபாபு என்று சகானாவின் காதல் கணவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செ‌ல்‌கிறது. த‌மிழக‌த்தை கல‌க்‌கிய சகானா, கேரளா வா‌லிப‌ர்களை ‌வி‌ட்டுவை‌க்க‌வி‌ல்லை. அவ‌ரிட‌ம் ஏமாந்தவ‌ர்க‌ள் ஏராள‌ம்.

இ‌ந்த புகா‌ர்க‌ள் அனை‌த்து‌ம் த‌ற்போது சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீ‌ஸ்தான் விசாரி‌க்‌‌கிறது. தனது ‌லீலைக‌ள் தெ‌ரி‌ந்து‌வி‌ட்டதா‌ல் சகானா த‌ற்போது தலைமறைவா‌கி‌வி‌ட்டா‌ர். போலீசார் தேடி வருகிறார்கள். சகானா‌வி‌ன் தாய் மொழி மலையாள‌ம் எ‌ன்றாலு‌ம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது என பல மொழிகளி‌ல் பே‌சி கல‌க்‌கி வ‌ந்து‌ள்ளா‌ர்.

'நான் அவனில்லை' என்ற சினிமா கதை போல, சாகசகா‌ரி சகானாவின் கதை த‌ற்போது உ‌ள்ளா‌ல் அவரை ‌பிடி‌த்தா‌ல்தா‌ன் இதில் எது உண்மை எ‌ன்பது தெரிய வரும். மிகவும் புனிதமான காதலையும், திருமணத்தையும் மையமாக வைத்து லட்சக்கணக்கில் பண மோசடி செய்த மோசடி ராணி, மயக்கும் மோகினி, மாயக்காரி சகானா எ‌ங்கே இரு‌க்‌கிறா‌ர்?

Thursday, 9 August 2012

"அதி புத்திசாலியாக இருப்பதைவிட, பெரிய மார்பகங்களையே விரும்பும் இளம் பெண்கள்"



 18-25 வயது வரையிலான இளம் பெண்கள், தான் அதி புத்திசாலியாக இருப்பதைவிட, பெரிய மார்பகங்களையே கொண்டிருக்க விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், பெரிய மார்பகங்களுக்காக புத்திசாலிதனத்தை துடைத்தெரிய தயாராக இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து பிரபலமாகும் மோகம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பெரிய மார்பகங்கள் உள்ள பெண்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலோனோர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

பதிலளித்தவர்களில் ஏறக்குறைய 60 சதவீதம் பெண்கள், ஆண்கள் 'அதில்' மிகவும் ஆர்வமாக இருப்பதால், பெரிய மார்பகங்களைப் பெற்றிருப்பதாகவும் கூறினர்.

விளம்பரங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாக நவீன பெண்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள் பரவலாக கவலையடைய செய்கிறது.

தங்கள் உடம்பை கவனிப்பதில் முன்னெப்போது இல்லாத அழுத்தங்களை பெண்கள் சந்திப்பதாக டெய்லி மெயில் என்ற பத்திரிகை கூறியுள்ளது.

பெண்கள் அழகாயிருப்பதற்கு தயார்படுத்தும் வணிகச் சந்தைகளின் மதிப்பும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. அதாவது ஆரம்பம் முதலே பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விட எப்படி இருக்கிறார்கள் என்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இதனால்தான் நிறைய உடல் இளைப்பு கூடங்கள், மருத்துவங்கள் பெருகி வருகின்றன. அவர்களது உணவு உட்கொள்ளும் பழக்கமும் கடுமையாக மாறி வருகிறது.