சீனாவில் இயற்கையின் கொடூர தாக்குதல் ; குழந்தைகள் இழந்தனர்., பலர் பெற்றோரை இழந்தனர் !
சீனாவில் நேற்று நடந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 200 தொட்டது. பலர் குழந்தைகளை இழந்தனர் , பலர் தங்களின் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு யார் உதவி செய்யப்போகிறார்கள், இவர்களின் எதிர்காலம் என்னவாகும் என நினைக்கும்போது உண்மையிலேயே நெஞ்சம் பதைக்கிறது.
மனிதன் அறிவியில் துறையில் எவ்வித முன்னேற்றம் கண்டாலும், இயற்கையின் சீற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதற்கு கடந்தகால சுனாமியே சான்று , பேயாக வந்து லட்சகணக்கான உயிர்களை காவு வாங்கி சென்றது இந்த சுனாமி . இது போன்று அவ்வப்போது இயற்கை நம்மை சபித்து வருகிறது. நேற்று சீனாவின் சியாக்சுவான் நகரில் நடந்த நிலநடுக்கத்தில் முதலில் உயிர்ப்பலி குறைவாகத்தான் இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால் சீன அரசின் அறிக்கையின்படி இந்த பலி எண்ணிக்கை 200 தாண்டியிருக்கிறது. 6 ஆயிரத்திற்கும் மேல் படுகாயமுற்றுள்ளனர். பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் தங்களின் சொந்த பந்தங்களை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர் .
குறிப்பாக ஒரு மாத குழந்தை ஒன்று தனது தாயை இழந்தது அறியாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இது போன்ற குழந்தைகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அன்பு உள்ளத்தோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலர் குழந்தைகளையும், பலர் பெற்றோர்களையும் இழந்துள்ளனர்.
இவர்களின் எதிர்காலம் எப்படி என்பதை சீன அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இன்னும் பலரை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 17 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீனாவில் நடந்த விபத்து என்பது வேறு ஆனால்உயிர்ப்பலி எங்கு நடந்தாலும் வேதனை உணர்வு ஒன்றே இதில் இனம் , மொழி, நாடு என்பதில் வேறுபாடு இருக்க முடியாது தானே !