Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Tuesday, 28 February 2012

என்ன எழவு கடிகாரமோ?

சமீபத்தில் "AA DHEKEN ZARA" என்ற ஹிந்தி படத்தை தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு ப்ரொஃபஷனல் ஃபோட்டோகிராபருக்கு விஞ்ஞானியான தன்னுடைய தாத்தாவிடமிருந்து ஒரு கேமரா கிடைக்கிறது. அந்த கேமராவில் இன்றைய தேதியை செட் பண்ணவே முடிவதில்லை. இனிமேல் வரப்போகும் தேதியும் நேரமும் மட்டுமே செட் பண்ண முடிகிறது.

முதலில் வீட்டு ஜன்னல் வழியே தெரியும் ஒரு புறாவை போட்டோ எடுக்கிறான். மறுநாள் அந்த புறா ஒரு ஜோடி சேர்த்துக் கொண்டு இரண்டு புறாக்களாக வந்து உட்காருகின்றன. டார்க் ரூமில் நெகட்டிவை டெவலப் செய்யும்போது போட்டோவிலும் இரண்டு புறாக்கள் தெரிகின்றன.

சந்தேகம் வந்து உடனே அடுத்த நாளுக்கான தேதியை செட் செய்து எதிர் வீட்டு ஜன்னல் வழியே தெரியும் பெண், பக்கத்து வீட்டு பால்கனியில் நிற்கும் குழந்தை உட்பட பலரையும் போட்டோ எடுக்கிறான். அந்த குழந்தை குடை ராட்டினத்தில் இருந்து விழுவது போலவும், எதிர் வீட்டு பெண்ணை யாரோ துப்பாக்கியில் சுட குறி வைப்பது போலவும் ப்ரிண்டில் வரவும் மறுநாள் அவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறான்.

நம் நாயகனுக்கு பணக் கஷ்டமும் கூட. பணத்துக்கு என்ன செய்வது என்று ஒரு பெட்டி கடை வாசலில் நின்று கொண்டு யோசிக்கும் போது, பக்கத்து லாட்டரி கடையில் பரிசுப் பணம் வாங்கிச் செல்லும் ஒருவனைப் பார்த்து ஐடியா கிடைக்கிறது. லாட்டரி கடை வாசலில் ரிசல்ட் எழுதிப் போடும் தகவல் பலகையை போட்டோ எடுத்து ப்ரிண்ட் போட்டு அதில் வரும் எண்களுக்கு பணம் கட்டுகிறான். அந்த எண்களுக்கு பரிசு கிடைக்கவும் தொடர்ந்து இதேபோல் லாட்டரி, குதிரை ரேஸ் என்று எல்லாவற்றிலும் சம்பாதிக்கிறான். பணம் கொழிக்கிறது. கூடவே அதே எதிர் வீட்டுப் பெண்ணுடன் (பிபாஷா பாசு :-(.... ) காதல் மற்றும் கேமராவை கைப்பற்ற முயற்சிக்கும் வில்லன்கள் கூட்டம் என்றும் மசாலாக்கள்.



சிறிது நாட்களுக்கு பிறகு தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் ஃபோட்டோ முற்றிலும் கருப்பாக வருகிறது. வெறும் தேதி நேரத்தை தவிர மீதியெல்லாம் இருட்டு(கருப்பு).அதே போல் கருப்பாக போட்டோ வந்த அன்றுதான் தாத்தா இறந்திருப்பதாக அறிகிறான். போட்டோவில் வந்திருக்கும் தேதியில் தானும் இறக்கப் போவதாக நம்புகிறான். அவனும் அவன் காதலியும் சேர்ந்து சாவை தடுக்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள். குறிப்பிட்ட தேதி நேரத்தில் ஒரு இருண்ட குழிக்குள் (கிணறு போன்ற) விழுகிறான். ஆனால் சிறிது நேரத்தில் உயிர் பிழைத்து வெளியில் வந்து விடுகிறான். அப்புறம்தான் புரிகிறது (அவர்களுக்கும்) போட்டோ கருப்பாக வந்ததற்கு காரணம் குழியில் இருந்த இருட்டுதான் என்பது.

வித்தியாசமான கதையாகவும், இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமலும் இருந்தது. ஒரு மனிதனுக்கு தான் இறக்கப் போகும் தேதி முன்பே தெரிந்தால் எவ்வளவு அவஸ்தை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

No comments:

Post a Comment